குழந்தைகள் தேசம்3

தாய்
தமிழ்
வாழ்த்துக்குப் பின் தான்
தமிழ்
தாய் வாழ்த்து!!....

அமெரிக்காவை கொலம்பசும்.....
சுழியத்தை இந்தியர்களும்.....
மகிழ்சியை குழந்தைகளும்!!.....
கண்டுபிடித்தவர்கள்?!......

நாய்க்குட்டியும்
பூனைக்குட்டியும் சேர்த்து
360 டிகிரியில்
நட்பு வட்டம் நீள்கிறது?!......

வெட்கத்தில்
கொடைக்கானல் வெள்ளி அருவி
பக்கத்தில் பளபளப்பு பற்களோடு
பச்சைக் குழந்தைகள்?!....

பத்திரமாய்
பாத்திரத்தை
நிரப்பச் சொல்கிறார்கள்
குழந்தைகளிடம்?!.......

தொடர்பு எல்லைக்கு
வெளியில் இருந்தாலும்
தொந்தரவு செய்கின்றன
குழந்தைகளின் சேட்டைகள்?!......

படைப்புக் கடவுளும்
பார்க்காத அதிசய
உல்லாச உலகம்!!......

தாத்தாக்களின்
அனுபவ நுரை
பப்புல்சாய்
பறக்கவிடப்படுகின்றன
பேரக் குழந்தைகளின்
குறும் மழலைச் சொற்களில்!!......

எழுதியவர் : வைகை அழகரசு (20-Feb-15, 12:33 pm)
பார்வை : 127

மேலே