குழந்தைகள் தேசம்4

தாய் மொழிதான்
ஆட்சி மொழி
அலுவல் மொழி
அனைத்திற்கும்
குழந்தைகள் தேசத்தில்!!......

குழந்தைகளின் முத்தத்தில்
காதல் அதிகம்!!......
காதலர்களின் முத்தத்தில்
காமம் அதிகம்?!.......

வாயப்பாட்டு சித்தர்களின்
வர்ணசால தரிசனம்
தினம் தினம்!!.....
குழந்தைகள் தேசத்தில்!!......

தாஜ்மஹால்
சாய்ந்த கோபுரம்
எகிப்து பிரமிடு
என்ன பெரிய பிரமிப்பு?!......
மணல் வீட்டின்
கலை நுட்பத்துக்கு ஈடாகுமா?!.......

படைப்பும்
உடைப்பும்
சகசம்
குழந்தைகள் தேசத்தில்!!.......

ஐந்து லட்சம்
நிறங்களை பிரித்தறியும்
நுட்பம் வாய்ந்தவை
நம் கண்கள்!!.....
அதுக்கு மேலே.....அதுக்கு மேலே.....
குழந்தைகளின் குறும்புகளில்
கொட்டிக் கிடக்கின்றன
கோடிக்கணக்கில் நுட்பங்கள்!!......

பஞ்சு மிட்டாய்க்காரனின்
பசிக் களைப்பை தணிக்கிறது?!......
பிஞ்சு விரல்களின் அழைப்பு!!......

தேனியாய்
குழந்தைகளின் மனம்
மகிழ்ச்சியைத் தேடுகிறது!!.....

ஹோர்லிக்ஸ்
போர்ன்விடா
தராத தெம்பை
அம்மாக்களின்
ஒற்றை முத்தம்
தந்துவிடுகின்றது!!......

எழுதியவர் : வைகை அழகரசு (20-Feb-15, 12:53 pm)
பார்வை : 95

மேலே