தென்னைமரம்

அரசர்கிருஷ்ணதேவராயரின்அவைக்குஒருநபர்வந்தார். அவர்அரசரிடம்,“அரசே!

என்னுடையவயலும்பக்கத்துவீட்டுக்காரர்வயலும்அருகருகில்உள்ளன.இரண்டுக்கும்இடையில்உள்ளவரப்பில்,ஒருதென்னைமரம்உள்ளது.பக்கத்துவீட்டுக்காரர்அதைஎனக்குவிற்றுவிட்டார்.நான்தான்அதைநன்றாகப்பராமரித்துவருகிறேன்.இன்றுஅவர்என்னைத்தேங்காய்பறிக்கக்கூடாதுஎன்றார்.இப்போதுஅவர்தன்முடிவைமாற்றிக்கொண்டுவிட்டாராம்.மரம்திரும்பஅவருக்குவேண்டுமாம்...”என்றுமுறையிட்டார்.

அதைக்கேட்டுஅவையினர்அனைவரும்திடுக்கிட்டனர்.அமைச்சர்சொன்னார்.“அந்தமனிதாபிமானம்அற்றமனிதரைக்கைதுசெய்துவந்துசிறையில்அடைக்கவேண்டும்”என்றார். அதற்குள்சேனாதிபதி,அந்தநபரைக்கைதுசெய்துவரத்தயாராகிவிட்டார்.

அப்போதுஅரசர்"என்னசெய்யலாம்?"என்றுகேட்பதைப்போல்தெனாலிராமனைப்பார்த்தார். தெனாலிராமன்புரிந்துகொண்டு,“தாங்கள்அனுமதிதந்தால்,இதற்கானதீர்வைநாளைக்குத்தள்ளிவைத்துக்கொள்ளலாம்...”என்றார்.

அரசர்,“சரி”எனவே,தெனாலிஅந்தநபரிடம்,“நாளைக்குஉன்பக்கத்துவீட்டுக்காரனையும்அழைத்துவா...”என்றுஅவனைஅனுப்பிவிட்டார். மறுநாள்அந்தநபரும்,பக்கத்துவீட்டுக்காரனும்சபைக்குவந்தனர்.

இருவரிடமும்நன்குவிசாரித்தபிறகுதெனாலிராமன்சொன்னார். “அப்படியானால்நீஉன்மரத்தைத்திரும்பஎடுத்துக்கொள்ளவிரும்புகிறாய்இல்லையா?”என்றார். அதற்குஅவன்,“ஆம்ஐயா!”என்றான்.

“சரி,நீஅவனுடையபணத்தைத்திரும்பக்கொடுத்துவிடு...”என்றார்தெனாலிராமன். அவனும்பணத்தைஎடுத்துக்கொடுத்துவிட்டான். சபையினருக்குஒன்றும்புரியவில்லை.“தெனாலிஏன்இப்படியெல்லாம்செய்கிறார்?”என்றுதிகைத்தார்.

பிறகுதெனாலி,மரத்தைவாங்கியவரிடம்,“சரி...இன்றிலிருந்துஅந்தமரம்உன்னுடையதுஇல்லை...”என்றார். அந்தமனிதரிடம்ஏமாற்றம். அப்போதுதெனாலிராமன்தொடர்ந்து,“இன்னொருவிஷயம்...அந்தமரம்நீவாங்கும்போதுஎப்படிஇருந்ததோஅப்படியேஅதைநீதிரும்பக்கொடுத்துவிடவேண்டும்...”என்றுகூறிவிளக்கினார்.

“அதாவதுநீமரத்தைஅவரிடம்வாங்கும்போதுஅம்மரம்காய்க்கத்தொடங்கவில்லை.ஆகவே,அதைத்திரும்பஒப்படைப்பதற்குமுன்புஎல்லாக்காய்களையும்பறித்துக்கொண்டுவிடு...”என்றார்வாங்கியவரிடம். திரும்பப்பெற்றவரிடம்,“காய்இல்லாதமரத்தைத்தானேநீவிற்றாய்...?

ஆகவே,என்றைக்கும்காயில்லாதமரம்தான்உன்னுடையது.அதில்இனிமேல்காய்க்கும்காய்கள்எல்லாம்மரத்தைத்திரும்பக்கொடுத்தவரையேசேரும்...அதைஅவர்பறித்துக்கொள்ளஅவ்வப்போதுநீஅனுமதிக்கவேண்டும்தடுக்கக்கூடாது;நீயும்பறித்துக்கொள்ளக்கூடாது...”என்றார். தெனாலியின்இத்தீர்ப்பைஅரசர்ஆமோதித்தார்.

திரும்பப்பெற்றவன்முகத்தில்ஏமாற்றம். புகார்கொடுத்தநபர்மகிழ்ச்சியுடன்எல்லாரையும்குறிப்பாக,தெனாலிராமனைவணங்கிவிட்டுவிடைபெற்றுசென்றார்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Feb-15, 9:23 pm)
சேர்த்தது : ஹாசினி
பார்வை : 98

மேலே