வறண்ட வயிறு - இராஜ்குமார்

வறண்ட வயிறு
~~~~~~~~~~~~~~

எட்டாநேத்து ஊறவச்ச
வெத நெல்லு மூட்டைய
இன்னிக்கிச் சாயங்காலம்
எடுத்துப் பிரிச்ச அப்பாவும் ....

கெணத்துத் தண்ணியை
கயினிக்கிக் காட்ட ...
வாய்க்காலை வெட்ட
சனிக்கி எடுத்த அம்மாவும் ..

பரங்கிக் கொழப்பியை
மடையிலச் சொருகி ...
தும்பியைத் துரத்துற
பக்கத்துக்கு வீட்டு பாப்பாவும் ..

வேப்பந்தழ வெட்டி
சேத்தோடு மெதிச்சி
ஏர்கலப்ப பின்னாடி
எகிறிக் குதிச்ச நானும். .

நேரத்தப் பாத்துட்டு
வெத்தலையைப் போட்டுட்டு
வரப்புல நின்னுகிட்டு
வெள்ளாம பேசின தாத்தாவும் ...

சாணிக் கொட்டுன இடத்த
சோறுப் போட்ட நெலத்த
கூறுபோட்டு விக்கிறத்துக்கு
கொஞ்சங்கூட தெம்புயில்ல...

தட்டுக் கழுவுற
தண்ணிப் போதும் ...
ஒத்த மரத்த
ஒழுங்கா வளக்க..

பொழப்பக் கொஞ்சம்
புதுசா செஞ்சா
வரப் புள்ளைங்க
வயித்த நெரப்பும்...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (24-Feb-15, 10:42 am)
பார்வை : 860

மேலே