மானமா தன்மானமா
..."" மானமா !!! தன்மானமா ??? ""...
ஒடிந்த நெளிந்த கீறல் விழுந்த
தட்டு கிழிந்ததை தைக்கப்படாத
மேலாடை தெரு குப்பையோடு
குப்பையாய் அழுக்கு படிந்திட்ட
சமூகத்தில் வருமானம் இல்லாத
வறுமையும் தன்மானம் காக்கும்
பெண்மையும் யாசித்துண்ணும்,,,
விதியென்று சொல்லி வெறும்
விதண்டாவாதம் பேசி மைபூசி
தன் பெண்மைதனை விலைபேசி
வீதியோரத்து விளக்கொளியில்
விட்டில் பூச்சிகளாய் தன் மானம்
விற்றே வாழுகின்ற உன்னினும்
யாசித்துண்ணும் பெண்ணே மேல்,,,
கைவிடப்பட்டுவிட்ட பெண்ணும்
கைகொடுகப்படாத பொண்ணும்
கெட்டுவிட்டொரு பெண்ணுக்கும்
கெடுக்கப்பட்டொரு பெண்ணுக்கும்
இந்நிலை தரணியில் தலைதூக்க
சாக்கடை சமூகத்தோடு நிச்சயமொரு
ஆடவனும் இதற்க்கு பொறுப்பாவான் ...
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...