எங்க போயி முட்டிக்கிறது

கணவன் மனைவி உள்ளே வர்றாங்க

மனைவி “டாக்டர் அடிக்கடி வாந்தி வருது”

“ எப்ப எப்பனு சொல்ல முடியுமா? “

“ அதான் சொன்னேனே அடிக்கடி...”


யோசித்துவிட்டு .................“வாழ்த்துக்கள் அம்மா ஆகப்போறீங்க“

“டாக்டர் ! வாந்தி எடுக்கிறது எங்க வீட்டுக்காரரு”

டாக்டர்:- ???

பேஷண்ட் யாருனே கேக்காம அவசரப்பட்டு ரிசல்ட சொல்லிட்டமோ?
..........................................................................................................................

“ஏன்பா, நர்ஸ் அந்த பேஷண்டை இந்த அறை அறைஞ்சுட்டுப்போகுது ?”

பக்கத்தில் இருந்தவர். “ ’எண்ணெய்’ய தடவச்சொன்னா ‘என்னை’யா தடவுற னு அறைஞ்சுட்டு போறாங்க”


பின்ன அறையாம என்ன செய்வாங்க

...................................................................................................

“ டாக்டர் முட்டி வலிக்குது “

“ஏன்யா நீ போய் முட்டிக்கிற. முட்டாம இருந்து பாரு வலிக்காது “

பேஷண்ட்:- ??? “

டாக்டர் இப்படிச்சொன்னா ...............நாம எங்க போயி முட்டிக்கிறது....


............................................................................................



“ என்னங்க தினமும் 3 தடவை மருந்து பாட்டிலை எடுத்து தடவி தடவி பார்த்துட்டு வக்கிறீங்க “

“ஆமாண்டி, டாக்டர் தான் தினமும் 3 வேளை மருந்தை தடவச்சொல்லி இருக்கார் “

மனைவி:- “ ??? “


புண்ணுமேல தடவுனா இந்த புண்ணாக்கு மருந்து பாட்டிலை தடவினு உக்காந்து இருக்கு..... அப்புறம் டாக்டரை குறைச்சொல்லும்....

எழுதியவர் : kingraj (24-Feb-15, 4:07 pm)
சேர்த்தது : கிங்ராஜ்
பார்வை : 110

மேலே