திருவிழா கடைதெரு பலூன் காரர்

அதிகாலையிலே கடைபோட்டு
மூச்சை மூலதனமாக கொண்டு
தெருவோரம் செருப்பு கூட இல்லாவண்ணம்
வெயில் கொட்டும் தரையில்
இவன் வாழ்க்கை பயணம் ...

திரு விழா கூட்டத்தில்
மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கூட ..
இவன் மட்டும் தன் வாழ்வை தேடுகிறான்..

கொஞ்ச நேரம்
உயிர் வாழ்கிறது ...
பலூன்கள் ...
இவர் மூச்சு காற்றில்..

அழும் குழந்தை ..
சிரிக்கிறது ...
அப்பா வாங்கி தந்த பலூனுக்கு ...

ஒவ்வொரு பலூனும் ...
விற்று தீர்கிறது ...

பலூன் கடைகாரர் ..
முகமும் ...சந்தோசத்தில்

விற்று தீர்ந்த பலூன் ...,,
வந்து சேர்ந்த பணம்...

அந்தி சாய்ந்த மாலையில்
வீட்டை நோக்கி ,கண்களும்
அவன் கால்களும் ..

கையில் ..குழந்தைக்கு
புது துணி ..
முகம் மலர்ந்த புன்னகை
சிந்துகிறது வழிப்பாதை எங்கும்

அவர் ...
கைதட்டும் வீட்டின் கதவில் ...
தாள் திறக்கும் மனைவி..
அள்ளி கொள்ளும் மகள் ...

குழந்தையின் சந்தோசத்தில்
கவலைகள் தொலைக்கிறது ..
இந்த பலூன் காரரின்
நெஞ்சம் ...

# குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (25-Feb-15, 3:17 pm)
பார்வை : 728

மேலே