அதே இரத்தம்

----------------------

அங்கே ஒரு மனிதன்
விபத்தில் படுகாயமாம்.
அவசர தேவையாம்
மனிதர்களின் இரத்தமாம்.

பதறி சிதறி
துடித்துடித்து
அனுதாபத்தோடும்
மனிதநேயத்தோடும்
உதவ முன்வருவோரோ
உங்களுக்கு ஒரு கட்டளை..!

உயிருக்கு போராடும்
அந்த மனிதன்.............
அந்த மதமாம்
இந்த ஜாதியாம்..

அதே மதத்தின்
அதே இரத்த நிறம்
அதே ஜாதியின்
அதே இரத்த வகை
கிடைக்குமா உங்களிடம்..........???

கிடைத்தாலும்
சில மில்லி மனிதத்தோடு
கிடைக்குமா ?

கிடைத்தால் சொல்லி அனுப்புங்கள்
அதுவரை.....
அன்று இரத்தமின்றி
உங்களால் மரணித்த நான்
கல்லறையில் தவம் கிடக்கிறேன்...


-இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (26-Feb-15, 11:23 am)
Tanglish : athey irtham
பார்வை : 105

மேலே