வருத்தப் பட்ட பாரம்
கிழிபடாத
முகங்களை
கீழ் நோக்கிய
திசைகளோடு.....
கிழித்தெறியும்
முகமூடிகளை
அதிகம் விரும்புகிறேன்.....
மெல்லிசை
மௌனம் என்பதே
மேகக் கூற்றின்
மாற்றுச் சிந்தனை....
மைவிழி தீட்டிய
மங்கையின் வாசத்தில்
மடி தேடும் படலத்தில்
நிர்வாண காற்று நான்....
கேட்க, சொல்ல, உணர...
நான் தவிர
நாண் ஒன்று
முகமூடி அணிகிறது.....
உறைய செய்வதில்
உள்ளூரக் கிழியும்
முகமூடிகளை அதிகம்
விரும்புகிறேன்....
ஆம்...
நான் முகமூடி மனிதன்....
முகம் அற்ற,
அமில வீச்சுக்கு
சொந்தக்காரன்.....
கவிஜி