என்னிடம் காற்றுப்பை உள்ளது

(ஒரு நீண்ட நெடுஞ்சாலையில்,

கனவன் மனைவி காரில் 60 மணி நேர வேகத்தில் பயணித்தனர்...

பயணத்தின் பொழுது மனைவியை பார்த்து கனவன் திடிரென, )

கனவன்: நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஓடிவிட்டன, நம் திருமணவாழ்வில் எனக்கு பிடிப்பு குறைந்து விட்டது எனவே என்னக்கு விவாகரத்து வேண்டும்.

(மனைவி: மனைவி பதில் எது சொல்லாமல் வேகத்தை 70 மணி நேர வேகத்தில் இயக்கினார்.)

கனவன்: இதற்கு முக்கிய காரணம் எனக்கு உன் நெருங்கிய தோழியின் மீது காதல் உள்ளது.

(மனைவி பதில் எது சொல்லாமல் வேகத்தை 80 மணி நேர வேகத்தில் இயக்கினார்.)

(சற்று யோசித்த கனவன் மேலும் தனது அதிர்ஷ்டத்தை பார்க்க எண்ணி)

கனவன்: மேலும் எனக்கு நம் வீடு வேண்டும்.

(மனைவி பதில் எது சொல்லாமல் வேகத்தை 90 மணி நேர வேகத்தில் இயக்கினார்.)

கனவன்: மேலும் எனக்கு நம் கார் வேண்டும்.

(மனைவி பதில் எது சொல்லாமல் வேகத்தை 100 மணி நேர வேகத்தில் இயக்கினார்.)

கனவன்: மேலும் எனக்கு நம் வங்கிக்கணக்கு மற்றும் காசோலை வேண்டும்.

(மனைவி பதில் எது சொல்லாமல் வேகத்தை 110 மணி நேர வேகத்தில் இயக்கினார்.)

(மேலும் மனைவி பெரிய மேம்பாலத்தை நோக்கி வண்டியை இயக்கினார்)

(இதை கண்டு பதட்டமடைந்த கனவன்)

கனவன்: உனக்கு எதுவும் வேண்டுமா ?

மனைவி: எனக்கு தேவையான எல்லாம் என்னிடம் உள்ளது ?

(ஆச்சிரியம் கொண்ட கனவன்)

கனவன்: அப்படியா அது என்ன ?

(120 மணிநேர வேகத்தில் மேம்பாலத்தின் சுவர் மீது மோதும் முன் புன்னகையுடன் சொன்னால்)

மனைவி: காரின் காற்றுப்பை (airbag).

எழுதியவர் : கு செ கு (26-Feb-15, 12:40 pm)
பார்வை : 111

மேலே