மெய்பொருள் காண்பது அறிவு

இரவு பதினோரு மணி காட்சி
இரண்டு மணிநேர வரிசை
இருபது ரூபாய் டிக்கெட்டின் விலை
அரை குறை ஆடையில்
ஆண்களும் பெண்களும்
நீண்டு நிற்கும் வரிசையில்
சின்ன சின்ன உரசல்கள்


ஆபாசங்களை பேசும் ஆசாமிகள்..
முகமுடி அணியா கொள்ளையர்கள்..
மனிதர்களை பிரித்த மடையர்கள்..
பகுத்தறிவை மறக்கடித்த பன்றிகள்...
நிறைந்த
அக்கூட்டத்தில் அறியா சிறுவனாய் நான்..
இரண்டு நிமிட காட்சி பொருளாய்
கல்லை காட்டி கடவுள் என்றனர்..

கல்லா கட்டியது
மனிதன் படைத்த கடவுளின் கடையில்..
ஒரு விசேஷ நாளில்...

கடவுள் காட்சி
இன்றே கடைசி
காணத்தவறாதீர்..
என்று எழுதவும் தோன்றிற்று
இந்நிலை காணும்போது...

எழுதியவர் : ஜெயக்குமார் கல்யாணசுந்தர (26-Feb-15, 2:21 pm)
Tanglish : kaatchi porul
பார்வை : 386

மேலே