ஞாயிற்றுக் கிழமை நகரக் கடை வீதிகள்

ஞாயிற்றுக் கிழமை நகரக் கடை வீதிகள் ............................
அரிசிக்காக அரிசியில் படம் வரைந்த டாலர்கள்
குதிங்காலில் கிழிந்த முழுக்கால் சட்டை
கண்ணாடிச் சேலையில் மல்லிகைப் பெண்கள்
வெயிலில் உருகும் பிளாஸ்டிக் டப்பாக்கடை
இறுகிய சட்டையோடு வியர்க்க நிற்கும் காவலர்
நூறுக்கு மூன்று ஐம்பது ரூபா சட்டை
ஆயிரத்து ஐநூறுக்கு ஆறு மாத சைனா செல்
அரக்கப் பறக்க பத்து ருபாய் டாப் அப்
படபடக் குறுந்தகவல் டபுள் ஒன் டபுள் ஜீரோவில்(1100)
கையை இழுக்கும் கட்யின் கடை நிலை ஊழியன்
குறைந்தபட்ச நூரெடுக்க கூட்டமாய் எடிஎம்ல்
கூவிக் கூவி விற்கும் கூறு கூறான பழத்தோடு
திங்கற்கிழமை வேலையை எண்ணிக்கொண்டே கூட்ட நெரிசல் நகரப்பேருந்தில்.............