நண்பேண்டா
ஒரு பணக்கார சிறுவனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு நிலவியது.
அந்நேரம் அங்கு வந்த தன் ஏழை நண்பன் , கவலையோடு இருக்கும் தன் பணக்கார நண்பனை பார்த்து,ஏண்டா,இப்படி உன் முகம் வாடி இருக்கிறது...?என்னடா பிரச்சனை..?
எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுடா,நான் தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னான்.
“சும்மா இருடா, எனக்கு உடனே இலட்சம் ரூபாய் தேவை.நான் ஒரு இக்கட்டில் சிக்கிவிட்டேன்.நானே என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன்.நீ வேற,என்னை கொஞ்சம் தனிமையில் இருக்க விடுடா..”என்று சொல்லிவிட்டு,
தன் ஏழை நண்பனை பார்த்து,டேய்,நீயோ பரம ஏழை.
எப்படிடா உன்னால் என் பணத் தேவையை தீர்த்து வைக்க முடியும்..? என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான் .
அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன்,
இதுவாடா பிரச்சனை..
இதற்காடா இப்படி கவலையோடு இருகின்றாய்..?
சரிடா,நான் உனக்கு பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்,
கவலையை விடுடா என்று சொல்லிவிட்டு,
தன் பணக்கார நண்பனைப் பார்த்து,
உனக்கு “இன்று மாலைக்குள் உனக்கு பணம் கிடைத்தால் போதுமாடா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.
பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
ஏழை நண்பனை ஏளனமாக பார்த்து ஒன்றும் பேசாமல் வெறும் தலையை மட்டும் அசைத்தான்.
அன்று மாலையே அந்த ஏழை நண்பன் இவன் கேட்ட பணம் ரூபாய் ஒரு இலட்சத்தை கொண்டு வந்து தன் பணக்கார நண்பனிடம் கொடுத்தான்.
பணத்தை பெற்றுக் கொண்ட பணக்கார நண்பனுக்கு
ஒன்றும் புரியவில்லை.
ஆச்சரியத்தோடு,தன் ஏழை நண்பனை பார்த்து,
எப்படியடா..? என்று கேட்டான்.
அதற்கு அந்த ஏழை நண்பன்..,
“டேய்,
நீ எப்போ பார்த்தாலும்,பணம்,பணம் என்று அதிகமா பணத்தை தான் சேர்ப்பதற்கு முனைப்பாய் இருந்தாய்...
நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய்.
ஆனால் நான் பணத்தை சேர்க்கவில்லையடா.
உன்ற மாதிரி நல்ல நண்பர்களைத்தான்டா
சம்பாதித்து இருக்கிறேன் ” என்றான்.
இருவரும் கண்களில் கண்ணீர் மல்க ஆரத்தழுவி
கட்டி அணைத்துக் கொண்டார்கள். …
ஆம்,நண்பர்களே
இந்த உலகத்தில் எதை சேர்ப்பதை காட்டிலும்,
மிகவும் சிறப்பானது,
உண்மையான,
தூய நண்பர்களை
சேர்ப்பது தான்.....