தீமை செய்யாமல் இருந்தாலே

ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது.ஓநாய் அதைத் தன் வாயில் கவ்வி சாப்பிட முயற்சிக்கும்போது, தன்னை விட்டு விடுமாறு அணில் கேட்டது.

அப்போது ஓநாய் ,”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,”என்றது.

அணிலும்,”உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?”என்று கேட்கவே ஓநாயும் பிடியைத் தளர்த்தியது.

உடனே மரத்தில் தாவி ஏறிய அணில்,”இப்போது உன் கேள்வியைக் கேள்,”என்றது.ஓநாய் கேட்டது,”உன்னை விட நான் பலசாலி. ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே! இது எப்படி சாத்தியம்?”..

அணில் சொன்னது,

”நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க .ஆனால் நான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.” என்றது.

இந்தக் கதையில் அணில் ஓநாயிடம்,

“உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரவம் பண்ணாதே’ என்று சொல்கிறது.

இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லியிருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறியிருப்பீர்கள்.

இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல.

ஆம்,நண்பர்களே..

நம்மால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை;

கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பெற்றிடுவோம்.அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது.அதுமட்டுமல்ல, நம்மை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும்.

நாம் எல்லோரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்று விரும்புவோம்.அதற்கு யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்பதுகூட இல்லை,

தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.

இயன்றவரை நன்மை செய்துவாழவேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் விதைப்போம்.

கடந்த காலம் ,அது போனது போனதுதான்.

ஆனால் எதிர்காலம் நம் கையில்.

அதை ஆக்கபூர்வமாக மாற்றலாம்.

மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது;

இருப்போமா?...

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (26-Feb-15, 10:42 pm)
பார்வை : 177

மேலே