பிப்ரவரி மாதமும், என் காதலும்

பேரனுக்குபீஸ் கட்டனும்..
உதவி பண்ணுப்பா
என வீட்டை கூட்டியபடி
வீட்டு பெரியவருக்கு பயந்தபடி
ரகசியமாய் கேட்ட
வயதான வேலைக்காரியும்
என் காதலி தான்


ஊர்விட்டு ஊர்பிழைக்கப்ப்போய்
குடித்தன காலனியில்
வாசற்படியில் கடக்கும் போது
வெறும் இட்லிக்கு
தொட்டுக்கொள்ள சட்னி
கொடுத்தவளும்
என் காதலி தான்…

வெயிலில் முந்தானையை போர்த்தி
தெருமுனையில்
தன் பொக்கை வாயால்
வேதனை மறந்து, புன்னகை சிந்தி
கீரைக்கட்டு விற்கும்
என் கேர்ள் பிரண்டும்
என் காதலி தான்..


கோயில் படிகளில்
பொங்கல் கொடுக்கையில்
சிந்தி பருக்கைளை
பொறுக்கி சிட்டு குருவிக்கு
ஊட்டியவளும்
என் காதலி தான்…

நோய்வாய்ப்பட்டு
படுக்கையில் கிடக்கையில்
முதுகு தேய்ந்து
மருந்திட்ட அந்த தனியார் மருத்துவ மனை
நர்ஸும்
என் காதலி தான்.


மிதிவண்டியில் அதிகாலை
பயணிக்கும் போது
சின்ன பாலத்தில்
எனக்காக கையசைக்க காத்திருக்கும்
ஜானகி பாட்டியும்
என் காதலி தான்..



ஆனால் எனக்கும் அவ(ள்)களுக்கு
காதலர் தினம்
பிப்ரவரி 14 அல்ல..

எழுதியவர் : காரைக்குடி மஹாதேவன் (27-Feb-15, 6:10 am)
சேர்த்தது : amsaraj
பார்வை : 51

மேலே