எது வீரம் ==0== குமரேசன் கிருஷ்ணன் ==0==
நீள் காம்புடைய ...
சிறுமலர்களைப் பறித்து
சிறுவயதில் சினமேற்றிய
சிரம் கொய்ய...
இடதுகையில் இருவிரலுக்குள்
இறுகப்பற்றிக் காம்புகளை
சுட்டுவிரலில் முழுவீரம் கூட்டி
சுண்டிடுவோம் வலக்கையால்
தரையில் சாயும் மலர்
தலையே சாய்ந்ததாய்
தலைக்கனமெழும்...
சிலநொடிகளில்
சினம் தணிந்து
சிறகுவிரித்து
சுழல்வோம் ஒன்றாய் ...
கத்திகளின்று ....
உறைக்குள்ளிருந்து
உருவப்படுகின்றன
காய்கனிகளை
நறுக்கியதொன்று
நிறைந்தது வயிறு ...
உடலைக்கீறி
உயிர்தந்ததொன்று
உள்ளமுணர்ந்தது கடவுளை ...
சகமனிதனைக் கொன்று
இரத்தம் சுவைத்ததொன்று
மனிதமழுதது...
செத்தப் பிணத்தைக்கண்டு
சாகப்போகும் பிணம்
தன் மீசை முறுக்கிற்று
தான் வீரனென்று ...
-----------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்