நிழலின் சதைகள் - இராஜ்குமார்

நிழலின் சதைகள்
~~~~~~~~~~~~~~~

நான்முகச் சாலையை
ஊர்ந்து கடக்கையில்

யாரோ ஒருவரின்
தோள்மீது தூங்கிய
காதலின் கவிதை ...

படியின் பிடியில்
பத்தாம் வகுப்பு
அறிவின் சிறகு ....

சாலை ஓரமாய்
செயற்கை ஒலியில்
தேசிய கீதம் ...

முகம் சுழித்து
முகவரி தேடும்
அறிமுக விழிகள் ...

காற்றை விரட்டிய
பேருந்தின் திசைகள்
அவசர அடையாளமாய் ...

முதுகைத் துளைத்த
முரண்களின் வளர்ச்சி
முன்னோக்கு சிந்தனையாம் ...

கல்லூரி மதிலருகே
கம்மங்கூழ் குவளையால்
எனது குரல்வளை நனைகையில் ...

சுவரின் தேகம் புணரும்
அந்தரங்க சுவரொட்டியை
அவளின் விழி மேய ....

உடைக்குள் ஊடுருவி
அவளின் உருவத்தைப் புணர்ந்தது
அவனின் விழிகள் ....

இக்காட்சியை விழுங்கிய
எனதிமை எரிந்து ..

நிகழ்வின் நிழலையையும்
பாறைப் பதுக்கலில் ஒளித்து
ஒழுக்கத்தின் ஓதங்களை
ஓயாமல் உரைத்து ....
நான்
சற்று திரும்பி
சமூகம் பார்க்கையில் ...
அழிதலை விரும்பியே
அத்தனை நிழலின்
சதைகளும் சரிந்தன
புரியாதப் புணர்தலில் ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (27-Feb-15, 10:16 am)
பார்வை : 220

மேலே