மகள்
பத்து வருடம்
போன என் இல்லறத்தில்
புதியதாய் ஒரு பாடத்தை
எனக்கு கற்றுக் கொடுத்தவள்
என் செல்ல "மகள்"
ஆம்...=
தந்தையின் மனம் நோகா வண்ணம்
தனக்கு தேவையானதை
திட்டும் வாங்காமல்,
அடியும் வாங்காமல்,
சண்டையும் இல்லாமல்,
பெற்று கொளவது எப்படி
என்பதை செயல் முறை விளக்கம்
தினமும் தருபவள்!