அம்மா

அம்மா
ஆயிரம் நான் தவறு செய்த போதும்
இடிந்து விடாமல்
ஈரம் கொண்டவளாய்
உறவு முக்கியம் என
ஊக்கம் கொடுத்து
எளிதாய் எதுவும் கிடைப்பதில்லை
ஏளன பேச்சு நமக்கு வேண்டாம்
ஐந்து அறிவல்ல உனக்கு
ஒரு முறை குடும்பத்தை யோசி
ஓரமாக அமர்ந்து யோசி
ஓளவை போல் உள்ள உன் பாட்டியின் பேச்சை கேள்
நாங்கள் காட்டும் மனமகனை திருமணம் செய்
என்றாள் தெளிவாக...

எழுதியவர் : பர்வீன் கனி (28-Feb-15, 1:50 am)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : amma
பார்வை : 393

மேலே