முதல் பிரசவம்

வியாழன் காலை 6.30க்கு பவித்ராவும் அவளது கணவன் வருனும் மருத்துமனைக்கு கிளம்பினார்கள்...பவித்ராவின் அம்மா எதற்காக இப்படி முன் கூட்டியே மருத்துவமனைக்கு போகனும், பிரசவ வலி வந்ததும் போகலாமே என்று மகளிடம் கேட்டு கொண்டே இருந்தாங்க.
அம்மா," எனக்கு கர்ப நேரத்தில் இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது இல்லையா, பிரசவ வலி வரும் வரை காத்துயிருப்பது குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதால் முன் கூட்டியே குழந்தை பிறப்பது நல்லது " என டாக்டர்கள் சொல்லியிருந்ததால் தான் நாம இப்படி முன் கூட்டியே அட்மிட் ஆக போகிறோம், நீங்க கவலைபடாமல் தைரியமா இருங்க.என்றாள்...
மகளின் வார்த்தைகளில் பவித்ராவின் அம்மாவிற்கு தைரியம் வரவேயில்லை, மகளுக்கு எதுவும் தவறாக நடந்துவிட கூடாது என்கிற பதட்டம் தான் இருந்தது...
மருத்துமனையில் பவித்ரா சேர்ந்து மூன்று நாள் முடிந்தேவிட்டது, மருந்து வைத்து குழந்தை பிறக்க காத்துயிருப்பதால் பிரசவ வலியை தவிர வேறு எதுவும் மிச்சமில்லை...பவித்ரா வலி தாளாமல் வருனிடம் ஆப்ரேசன் செய்து குழந்தையை எடுக்க சொல்லிடுவோம் என கெஞ்சினால், வருனோ மனைவியின் வலியை பார்க்க மனம் இல்லாமல் டாக்டரிடம் ஆப்ரேசன் பற்றி பேசிய போது, டாக்டர் தெளிவாக சொன்னது" உங்க மனைவியின் வயது 23 தான், எந்த பிரச்சனையும் இல்லாமல் சுக பிரசவம் ஆகும்." கவலைப்படாமல் உங்க மனைவிக்கு தைரியம் சொல்லுங்க...
ஞாயிறு பிறந்தது காலை ஆறு மணிக்கு பவித்ராவின் பனி குடம் உடைந்தது...வலியின் அளவும் அதிகமானது....பவித்ராவின் அம்மா டாக்டரிடம் சென்று மகளின் பனி குடம் உடைந்ததை தெரிவித்தாள்...
அவசர அவசரமாக பவித்ரா டெலிவரி பகுதிக்கு அனுப்பப்பட்டாள்...
வலி அதிகரிக்க அதிகரிக்க பவித்ரா தன் கணவனிடம் ஆப்ரேசன் செய்து கொள்ளலாம் என்றாள்...
வருன் டாக்டரிடம் பவித்ராவின் வலியை பற்றி சொன்னதால் வலி தெரியாமல் இருக்க ஊசி போடலாம், சுக பிரசவம் ஆகும் என டாக்டர் சொன்னார்...
காலை 11 மணியளவில் பவித்ராவின் பிரசவ வலி தெரியாமல் இருக்க ஊசி போடப்பட்டது...
மாலை 4.24க்கு புத்தம் புதிய பூவாய் பவித்ராவின் மகன் பிறந்தே விட்டான்...
4 நாள் பிரசவ வலிக்கு விடை கிடைத்தது...

எழுதியவர் : பர்வீன் கனி (28-Feb-15, 12:06 am)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : muthal pirasavam
பார்வை : 358

மேலே