என்னை மறந்து நீயும்

உன்னாலே மீண்டும் உயிர்த்து வந்தேனே
தன்னாலே உந்தன் காதல் தந்தாயே
ஆசையில்லாமலா நீ
போதை உண்டாக்கி சென்றாய்..
அன்பே என் தனிமை இன்று கொன்றாயே!
துன்பக் கடலில் உழலும் இந்தக் காளையை
நெஞ்சில் வைத்து காத்திடும் என் தேவதை
மலையைக் கூட கடுகாக்கும் உன் காதலை
மனதில் ஊற வைக்கும் உந்தன் சிந்தனை
வாசம் குன்றாத பூவே ..
வாட்டம் இல்லாத மானே ..
அன்பே..என் நெஞ்சை விட்டு நீங்காதே!
சாதி மதம் எதுவும் இல்லை நம் இடையிலே
தவிடுபொடி ஆகும் பலர் இடும் தடையிலே
மனித நேயம் மட்டும் நமது மனதிலே
எந்த நாளும் நிலைத்திருக்கும் நிலையிலே
உன்னைப் பிரிந்து நானும்
என்னை மறந்து நீயும்
எப்போதும் இருப்பதென்பதில்லையே!