நீலக்குயில் தேசம்25---ப்ரியா

மதனும் அவனது நண்பர்களும் சரியாக காலை 8.30 மணிக்கே கயல்விழியின் கல்லூரி வாசலில் வந்து நின்றனர்.எதிரோ இருக்கும் கடைக்கு போவதும் வருவதுமாக காலம்கடத்தி எப்படியும் மணி 9.20 ஆகிவிட்டது இன்னும் கயல்விழியைக்காணவில்லை.....நண்பர்கள் விரக்தியோடு இவனை பார்க்க...... இவனோ தன் தேவதையின் தரிசனம் ஒருமுறை கிடைக்காதா?என்று ஏக்கத்தோடு நின்று கொண்டிருந்தான்.

டேய் மச்சான் இவனும் இவன் ஆளும்தான் வாங்கடா போலாம் எவ்ளோ நேரம் என்று ஒருவன் சொல்லி திரும்பிய நேரம் அந்த

சாமந்திப்பூவின் காற்றை இவன் உள்ளிழுத்தான் மதன்.

டேய் அவ வந்துட்டாடா......இங்கதான் எங்கயோ இருக்கா என்று கண்களை சுழல விட்டான்.

எங்கடா அவ வந்த மாதிரியே தெரில?மச்சி இவன் அவள பார்த்த நாள்ல இருந்து லூசு மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்டான் இவன் கூட இன்னும் கொஞ்சநேரம் நின்னோம் அவ்ளோதான் நம்மளையும் பைத்தியம் ஆக்கிருவான் என்று நண்பனில் ஒருவன் புலம்பிக்கொண்டிருந்தான்.

அங்கபாருடா நெஜமாவே கயலும் ப்ரண்ட்சும் வந்துட்டாங்க என்று இன்னொரு நண்பன் சொல்ல அதுவரை படபடப்பாய் தேடிக்கொண்டிருந்த இவனது கண்கள் அவன்காட்டிய திசையில் நின்றது.அவளை ஒருமுறை பார்க்கவேண்டுமென்றவன் அவளையும் அவளது அந்த அழகிய புன்னகையையும் இங்கிருந்தே ரசித்தான்......

தோழிகளுடன் பக்கத்திலிருந்த கடைக்குள் நுழைந்தாள் கயல்.

போதும்டா இனி கிளம்பலாம் என்று மதனின் உதடுகள் சொன்னாலும் மனதின் ஏக்கத்தை கண்களில் புரிந்து கொண்ட நண்பர்கள் அவனை அழைத்துக்கொண்டு கயல் சென்ற கடைக்குள் நுழைந்தனர்....தூரத்திலேயே நின்று கொண்டு ஏதோ பொருள் வாங்குவது போல் அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.

ராகேஷிடம் நீலக்குயில் தேசத்தில் தன் காதலை கனவில் வருவது போன்று அந்த சூழலில் வைத்து சொல்லிவிட்டு அன்பளிப்பாக காதல் சாட்சியாக கொடுப்பதற்காக ஒரு காதல் பரிசைத்தேடினாள்........கண்களில் அவள் தேடுதல் முற்றுபெறவில்லை தேடலின் முடிவில் அவள் கண்களுக்குள் சிக்கியது அந்த பேரழகான செயற்கை காடு நீலக்குயில்தேசம்.........அதாவது கண்ணாடியால் ஒருகுடுவை போன்று வடிவமைக்கப்பட்டதனுள் அழகிய காடு போன்ற இயற்கை காட்சிகளுடன் மின்னிக்கொண்டிருந்த அந்த கிப்டை எடுத்தாள்.

அதில் காதலன்காதலி அந்த எழிலை ரசிப்பது போன்று ஒரு அமைப்பும் இருந்தது இத பார்த்ததும் அவளுக்கு கனவு தேசம் தான் நினைவுக்கு வந்தது..........உடனே அதை செலக்ட் பண்ணிவிட்டாள்.

ஏதோ ஒரு பெரிய விஷயத்தில் வெற்றியடைந்து விட்டதாய் அவள் கண்கள் சந்தோஷத்தில் மிதக்க........அதையும் மதன் அவளெதிரில் நின்று ரசித்துக்கொண்டிருந்தான்.

இதை கவனித்த கயலின் தோழி ஷீபா "ஏய் அங்க பாருடி கொஞ்சம் பசங்க இங்கே நிறைய நேரமா நம்மளயே பார்த்துட்டிருக்காங்க" என்று மதனை காட்டிக்கொடுத்தாள் அவள் இவனைப்பார்க்கும் சமயம் இவன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

அதற்குள் அங்கு ராகேஷ் வர ராகேஷ் பக்கம் திரும்பினாள் கயல்விழி......இங்க என்னப்பா பண்ற என்றவன் அவள் கையில் இருந்த கிப்டை பார்த்தான்.

என்ன இது என்று கேட்டான்?

அதுவா அது வந்து அது வந்து..........இப்போ சொல்லமாட்டேனே என்று குறும்புடன் கலாய்த்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த மதனுக்கு வெறுப்பேறியது......சரிடா வாங்க போகலாம் என்று நண்பர்களை அழைத்து ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

அவளை பார்த்ததில் இருந்த அளவுக்கு சந்தோஷமும் கவலையுமாய் இருந்தான் மதன்.

நண்பர்களுக்கு போதும் போதும்னு சொல்ற அளவுக்கு தன் செலவில் விருந்தும் கொடுத்துவிட்டான் மதன்.

நண்பனில் ஒருவன் மச்சி சொல்றனேன்னு தப்பா நினைக்காத அவ ரொம்ப அழகா இருக்காடா, இவ்ளோ அழகா இருக்கிறவளுக்கு பின்னால கண்டிப்பா நிறைய பேரு காதல்னு சுத்திருப்பாங்க அவ காதலிக்காமலா இருப்பா இந்த காலத்துல பொண்ணுங்க ரொம்ப ஸ்பீடுடா மட்டமான அழகுல இருக்கிறவளுங்களே காதல்னு விழ ஆரம்பிச்சிட்டாளுங்க கயல்விழி பேருக்கு ஏற்ப பிறரைக்கவரும் விழியும் அழகிய நடையும் கொடி இடையுமாய் சிக்குன்னு இருக்காடா அவ இதுவரைக்கும் காதலிக்காமலா இருப்பான்னு சந்தேகம் வருதுடா........அதுவும் இல்லாம அவங்கள பார்க்க ஒரு பையன் வந்தான் தெரியுமா அவன் கூட அவள காதலனா இருக்க வாய்ப்பு இருக்குது எதுக்கும் அவக்கிட்ட நீயே போய் பேசுடா நாளைக்கு ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னால அவள போய் பாரு பேசு என்று நண்பன் தன் எண்ணத்தை மதனிடம் சொன்னான்.
மதனுக்கும் இதுவே சரி எனப்பட்டது.......சரிடா நாளைக்கு பேசுறேன் என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு அனைவரும் தங்கும் அறைக்கு சென்றனர்.


இரவு படுத்தவனுக்கு தூக்கம் சிறிதும் வரவில்லை.....தன் செல்போனை எடுத்து கயலுக்கு பேச நினைத்தவன் ஏதோ தடுக்க அப்படியே வைத்துவிட்டான் எதுவாயினும் நாளை பேசலாம் என முடிவெடுத்தான்.

நான் தான் உன் அத்தை பையன் என்று சொன்னால் அவள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தவன் மனமுழுவதும் காதலுடன் அவள் நினைவில் தூங்கிவிட்டான்.

________________________________________________________________________________________________________________________________

வீட்டிற்கு சென்ற கயல் அடுத்தநாள் சுற்றுலா செல்வதற்கு தேவையான பொருட்கள் துணி மணிகள் அலங்காரப்பொருட்கள் என எல்லாம் சரியாக உள்ளதா என பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்......அதன் பிறகு ராகேஷ்க்கு கொடுக்க வைத்திருந்த பரிசை எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் அந்த கைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

எப்போது நீலமலை போவோம் என்று ஏக்கத்தோடு கற்பனையில் ரசித்துக்கொண்டிருந்தாள் கயல்.

கயலும் அவள் அம்மாவும் சாமியார் சொன்ன அந்த கனவு விஷயங்களை மறந்தாலும் கயலின் தாத்தா மறுப்பதாக இல்லை அடிக்கடி சாமியாரை சந்தித்து வந்தார்......இன்றும் அதேப்போல்தான் சாமியாரை பார்க்க சென்றார்.

அப்பொழுது சாமியார் சொன்ன விஷயம்.......

உங்க பேத்தி கயல்விழி விஷயத்துல என் கணிப்பு உண்மை எனில் இன்னும் 5நாட்களில் நிச்சயம் அவன் கண்களுக்கு அவன் தெரிவான்,

ஆனால் அவனை சந்திக்கும் நேரம் கயல்விழிக்கு ஒரு பேராபத்து நேரிடும் வாய்ப்பு உள்ளது அவள் பலன் அப்படி தான் இருக்கிறது கவனமா பார்த்துக்கோங்க..........அவள் ஒரு பெரும் போராட்டத்தில் இருக்கிறாள் ஆனாலும் சிறு பிள்ளையாய்தான் இருக்கிறாள் முன் ஜென்மத்துல அப்படி என்னதான் நடந்திருக்கும் என்பதும் இந்த 5 நாட்களில் அவளுக்கு ஓரளவுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது என்று சாமியார் சொன்னார்.

இதைக்கேட்டதும் தாத்தாவுக்குள் பயம் தொற்றிக்கொண்டது வரக்கூடிய 5 நாட்களும் அவளை வெளியில் அனுப்பக்கூடாது என்ற முடிவோடு வீட்டிற்கு வந்தார் தாத்தா.

கயலின் அறைக்குள் வந்தாள் கயல் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள் அவளை எழுப்பவேண்டாமென நினைத்தவர் அவள் தலையை மெதுவாய் வருடி உச்சிமுகர்ந்துவிட்டு சென்றார்.

சுசீலாவை அழைத்து நடந்த சம்பவத்தை சொன்னவர்.....இனி 5நாட்கள் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் அவளை கல்லூரிக்கு அனுப்பவேணாம் என்று சொல்ல.........மாமா அவளுக்கு நாளை சுற்றுலா.......சுற்றுலா செல்வதற்கு தயாராய் இருக்கிறாள் என்று சொன்னாள் சுசீலா...சுற்றுலாவும் சரிதான் எதுவும் சரிதான் அவளை அனுப்பவேணாம் அவ்ளோதான் என திடமாக சொன்னார் தாத்தா...????





தொடரும்..........!

எழுதியவர் : ப்ரியா (28-Feb-15, 4:33 pm)
பார்வை : 268

மேலே