என்னவளே -தொடர்கதை
என்னவளே -தொடர்கதை
பகுதி-5
கல்பனா அறைக் கதவை திறந்து பார்த்தாள்.அம்மா நீயா என்ன என்றாள்..ஏன் உன் அறையில் விளக்கு எரிஞ்சுக்கிட்டே இருக்கு என்றாள் ராஜலக்ஷ்மி அம்மாள் ...சாரிம்மா நான் ஆபீஸ் பைல்ஸ் எல்லாம் பார்த்தேன் அணைக்க மறந்துட்டேன் இதுக்கா என்ன மெனக்கெட்டு எழுப்பின என்றாள் கல்பனா சற்று கோபமாக .இது அவர்கள் வீட்டில் அடிக்கடி நிகழ்வது தான் என்றாளும் கல்பனாவின்
பேச்சில் இன்று கோபம் சற்று கூடுதலாக இருந்தது .அதை பார்க்கவே ராஜலக்ஷ்மி அம்மாள் அங்கு வந்தாள்.
அடுத்த நாள் காலை கல்பனா அலுவலகம் செல்லும் மூடில் இல்லை .இதற்கு காரணம் அவள் இரவு முழுவதும் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்ததுதான் . எந்த காரணம் சொல்லி விடுப்பு எடுக்கலாம் என்று யோசித்தவாறே படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தாள் .
நேரம் காலை 7.30 .ராஜலக்ஷ்மி அம்மா மிகுந்த தயக்கதுடன் கதவை தட்டினாள்.கல்பனா கல்பனா மணி எவ்வளவு ஆச்சு நீ எப்பவும் இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே என்ற படி திரும்ப தட்ட கதவு பட் என்று திறந்தது . அம்மா எனக்கு தெரியாத நேத்து மழையில நனைஞ்ச நாள எனக்கு ஜலதோஷம் தலைவலி அதான் இன்று ஆபீஸ் செல்லவில்லை என்றாள் .ஆனால் ராஜலக்ஷ்மி அம்மாள் ஒருவாறு இதை எதிர்பார்த்திருந்தால் .
சரிம்மா நானும் நேத்தே உன்கிட்ட சொல்லனும்னு நினைத்தேன் .நேத்து வையாபுரி மாமா அப்பாக்கிட்ட ஏதோ வரன் இருக்கிறதா சொன்னார் .உனக்கு எப்போ டைம் கிடைக்குமோ அப்ப
வர சொல்லலாம்னு அப்பா சொன்னார் .இன்னைக்கு நீ ப்ரீ தானே நான் அவர்களை இன்று மாலையில் வர சொல்றேன்னு அம்மா இடத்தை விட்டு நகர்ந்தாள். கல்பனா செய்வதறியாது திகைத்து நின்றாள். மன அமைதிக்கு விடுப்பு எடுக்கலாம்னா இங்கு பூகம்பமே வரும் போல் இருக்கிறதே இதற்கு நான் அலுவலகமே சென்றிருக்கலாம் என்று எண்ணியவாறு அவள் தன் அன்றாட பணிகளை செய்ய தொடங்கினாள். ராஜலக்ஷ்மி அம்மாள் கணவரிடம் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னங்க உங்க நண்பர் சொன்ன வரனை இன்னைக்கே வர சொல்லுங்க என்றாள்
வரபோகும் ஆபத்தை அறியதவளாய் .
பகுதி-6
ராமைய்யா வையாபுரியிடம் தகவலை தெரிவித்தார் .ஏம்மா மழைக்காலம் அதனால நான்கு மணிக்கே வர சொல்லிடறேன் என்றார் . ராஜலக்ஷ்மி அம்மாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வடை கேசரி மைசூர்பா தேங்காய் சட்னி தயாரிப்பதில் ஈடுபட்டாள். கல்பனா தயங்கியவரே சமையல் அறையில் நுழைந்து அம்மா நான் உனக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா என்றாள் .ராஜலக்ஷ்மி அம்மாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது .சிறிது சுதாரித்து ஏம்மா என் கிட்ட ஏதாவது பேசனுமா என்றாள் . கல்பனா இல்லம்மா உனக்கு உதவி செய்யலாம்னுதான் என்றாள் .
ராமைய்யா பிள்ளை ஹாலில் இருந்தவாறு கல்பனா உனக்கு யாரோ சியாம் கால் பண்ணியிருக்கா பாரு என்றார் . கல்பனாவிற்கு பயம் பரவியது .இவன் எதற்கு வீட்டு நம்பரில் அழைக்கிறான் என்று எண்ணியவாறு ஓடி சென்று ரிசிவரை எடுத்தாள்.ஹலோ நான் சியாம் பேசறேன் உனக்காக எவ்ளோ நேரம் உங்க தெரு முனையில நிக்கறது .இப்போ நீ வரயா இல்ல நான் உங்க வீட்டுக்கே வரவா என்றான் கோபமாக .கல்பனா பயத்துடன் இல்ல எனக்கு உடம்பு சரியில்ல அதான் வரல நீ கிளம்பு என்றாள் . நேத்து நீ எதுக்கு எனக்கு போன் பண்ணல என்றாள் .உங்க அம்மா நேத்து எனக்கு கால் பண்ணாங்க அவங்களுக்கு என் நம்பர் எப்படி கிடைததுன்னு தெரியில அவங்க இனிமே உன்ன பாக்க கூடாது பேச கூடாதுன்னு அவங்களே பேசிக்கிடிருன்தாங்க என்ன பேசவே விடல என்றான் .கல்பனா அம்மாவா என் கிட்ட ஒன்னும் சொல்லல உன் போட்டோ பின்னாடி நீ எழுதி குடுத்த நெம்பர் பார்த்து இருப்பாங்கன்னு நினைக்கிறன் என்றாள் .சியாம் சரி வா நான் இங்கயே வெயிட் பண்றேன் நீ சீக்கிரம் வா ஆபீஸ்க்கு டைம் ஆகுது என்றான் . கல்பனா இல்ல நான் இன்னைக்கு ஆபிஸ் போல எனக்கு உடம்பு சரியில்ல நீ போ என்றாள் . ஏன் உடம்பு சரியில்லையா இல்ல யாரவது பொண்ணு பாக்க வராங்களா என்றான் நக்கலாக .அது எப்படி உனக்கு தெரியும் என்றாள் கல்பனா. எல்லா விஷயத்தையும் உங்க அம்மா என் கிட்ட சொல்லிட்டாங்க நீ ஏன் பொய் சொன்ன உடம்பு சரியில்லன்னு பொண்ணு பாக்க வராங்கன்னு உண்மைய சொல்லி இருக்கலாம் இல்ல என்றான் கடுப்பாக . அதற்குள் அம்மா சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்து கல்பனா யாரு நான் வேணும்னா பேசட்டா என்றாள் .இல்லம்மா நானே நானே பேசிட்டேன் என்றவளாய் இணைப்பை துண்டித்தாள்.
--------------தொடரும் --------------------

