பூக்காரன்

பூக்காரன்

அதிகாலை எழுந்தவுடன் கட்டி வைய்த்த பூக்களெல்லாம் மலர்ந்து விட்டனவா என்று பார்த்து கண் விழித்த சாமுண்டி (பூக்காரன்) பூக்கூடை சுமந்து வெளியே வந்து கடவுளுக்கு ஒரு பூவை கணிக்கையக்கிவிட்டு வணக்கி புறப்பட்டான் .

விழித்தும் வெளியே வராமல் வீட்டிற்க்குள் நகர வாழ் மக்களின் செவியில் பூவம்மா , பூவே என்று கூக்குரல் விழ எட்டிப்பார்த்து ஏம்பா , எவ்வளவு ஒரு முழம் பூ என்று கேட்க ஒரு முழம் 10ரூ என்று சொன்னான் . என்னப்பா விலை அதிகமா இருக்கு என்றதும் இல்லம்மா உங்க வீடு தேடி வந்து குடுக்கிறோம் பார்த்து கலையிலே போனி பண்ணுங்க என்று முதல் கிராக்கியை விடாமல் விற்பனை செய்தான் .

பிறகு அடுத்தடுத்து தெருக்களெல்லாம் செல்லும்போது அன்று சீக்கிரமே வியாபாரம் முடிய வீடு திருபினான் பூக்காரன்.

அடுத்த நாள் காலையில் சற்று அதிகமாக பூக்களை வியாபாரத்திற்கு கொண்டு செல்ல கொஞ்சம் மிஞ்சியதை வீட்டிற்கு கொண்டு வந்தான் . மிஞ்சிய பூவை கண்ட அவனது மனைவி ஏங்க , நீங்க ஏன் தெருவுக்கு மட்டும் போறிங்க மற்ற நிறுவனங்கள் , அரசு , தனியார் அலுவலகங்கள் போன்ற எல்லா இடத்திலும் வியாபாரம் செய்ங்க என்று உணர்தியவுடன் ..

சரிம்மா நாளைக்கு அதுபோல போய் விற்று பார்க்கிறேன் என்று பணிந்தான் !

மறுநாள் காலை கிழக்கு வெளுக்க கிளம்பிய பூக்காரன் பரவலாக சென்று கூவி விற்க சில இடங்களில் பூக்களை வரவேற்று நல்ல விற்பனை. நெஞ்சதனுள் நெகிழ்ந்தான் மனைவி கூறிய யோசனையை நினைத்து .

தொடர்ந்து விற்பனை செய்த பூக்காரனிடம் ஒரு நாள் ஒரு அதிகாரி பூக்காரரே ! எங்கள் இல்ல திருமணதிற்கு நாளை மறுநாள் 100 கிலோ பூக்கள் தேவைபடுகிறது என்றதும் சரிங்கய்யா என ஒப்புக்கொண்டு விளையும் பேசி, முன்தொகையும் பெற்றான் . அதே கையோடு பூந்தோட்டம் வைத்திருக்கும் விவசாயிக்கு தொடர்பு கொண்டு நாளைக்கு எனக்கு 100 கிலோவுக்குமேல் பூ வேண்டும் என்றவுடன் எதிர்முனையில் அவரது குரல் சற்று தொய்ந்தவாறு எனக்கு உடல் நிலை சரியில்லை ஆகவே வேறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள் என்று கூற அய்யா , அப்படியானால் நானே வந்து பூக்களை பறித்து விற்பனை செய்து உங்களுக்கான பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று தயக்கமில்லாமல் சொன்னதும் ஒப்புக்கொண்டு தோட்டக்காரனும் ஒத்துழைக்க பூக்களை பறித்து வாகணத்தில் ஏற்றிக்கொண்டு வந்து திருமண வீட்டில் கொடுக்க அமோக விற்பனை செய்த பூக்காரனுக்கு லாபம் பெருத்த மகிழ்ச்சி .

மருத்துவ செலவுக்கு பணம்மில்லாமல் தவிக்கும் பூந்தோட்டகாரரிடம் சென்று அவருக்கான தொகையினை கொடுத்த மகிழ்ச்சி கலந்த நிம்மதியோடு வீடு திரும்பிய வியாபாரி சாமுண்டிக்கு மனதில் எட்டியது நாமும் வாழ்கிறோம், நம்மை நம்பிய பூந்தோட்டகாரரையும் வாழ வைக்கிறோம், செலவாளிக்கோ சந்தைக்கு சென்று பூ வாங்கும் வேலை மீதமானதும், நேரடியாக தோட்டத்திலிருந்து வருவதால் விலை குறைவாக கிடைத்ததில் சிறு ஆனந்தம். இந்த பூ மணம் பரவி வீசுவதைபோல் நாட்டிலுள்ளோர் அனைவரின் வாழ்க்கையும் தழைத்து வீசட்டும் என எண்ணி மகிழ்ச்சியை மனைவியிடம் பகிர்ந்துகொள்ள நடையை எட்டிபோட்டன் பூக்காரன்.

-பொய் வை . பூந்தளிரன்

எழுதியவர் : பொய் வை - பூந்தளிரன் (28-Feb-15, 12:34 pm)
சேர்த்தது : poonthaliran
பார்வை : 226

மேலே