முருகனை துதிப்போம்

முருகனை துதிப்போம்

அழகின் இருப்பிடமே போற்றி
ஆறுமுகங்களின் கருணையே போற்றி
இடுமபையை நீக்குவாய் போற்றி
ஈகையை தருவாய் போற்றி
உள்ளத்தின் உண்மையே போற்றி
ஊனம் களைவாய் போற்றி
என்னை உய்விப்பாய் போற்றி
ஏகாந்தம் அளிப்பாய் போற்றி
ஒருபொழுதும் மறவா உண்மையே போற்றி
ஓம் எனும் பிரணவமே போற்றி
ஔவைக்கு உணர்த்தினாய் போற்றி
பண்ணிரண்டு கரத்தனை போற்றுவோம்
போற்றி போற்றி

அருளின் அமைதியே போற்றி
ஆதிசிவனின் அங்கமே போற்றி
இன்பம் அளிப்பவனே போற்றி
ஈசனுக்கு இணையானவனே போற்றி
உயிரெழுத்தின் உறைவிடமே போற்றி
ஊழும் சூதும் நீக்குவாய் போற்றி
எந்நாளும் எனை ஆள்வாய் போற்றி
ஏற்ற தாழ்வு அற்றவனே போற்றி
ஐம்புலனின் அடக்கமே போற்றி
ஒருகை தண்டமே போற்றி
ஓம் எனும் ஒலியே போற்றி
ஔவைக்கு பழம்அருளிய ஐயனே போற்றி
சக்திவேல் உடையோனை போற்றுவோம்
போற்றி போற்றி

எழுதியவர் : கே என் ராம் (23-May-24, 6:30 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 29

மேலே