அகல்யா

நாளை எனக்கு திருமணம் என சொல்லி கொண்டாள் அகல்யா,
அகல்யாவிற்கு அவளது மாமா பையன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. அகல்யா ஆறாம் வகுப்பு படிக்கும் போது திருச்சியில் படித்து கொண்டுயிருந்த அசோக்கை அவனது விருப்பமின்றி வெளியூருக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்தவை எல்லாம் இப்பொழுது கண் முன் ஓடியது.
அன்று யாரிடமும் எதுவும் கேட்க தெரியாமல் அசோக் வெளியூர் சென்றதும் தெரியாமல் அகல்யாவின் நாட்கள் ஓடியது. ஒரு நாள் திடீரென அகல்யாவின் அம்மா தன் அண்ணனிடம் கல்யாண பேச்சு பேசுவது அகல்யாவின் காதுகளில் கேட்டது...
மெல்ல எழுந்து மாமா இருந்த இடத்திற்கு வந்தாள்...அவளது மாமா ,"என்னம்மா என்னை செய்ய சொல்ற, உன் மருமகன் தான் தெள்ள தெளிவா உன் பெரிய மகளை கல்யாணம் செய்யவே முடியாது என உனக்கே கடிதம் போட்டு இருக்கானே...அவனை வெளியூர் அனுப்பியதே," உன் அண்ணி" வெளியூர் பொருட்களை அனுபவிக்கனும் , என்பதால் தான். அவன் வெளிநாடு சென்று 1 வருடம் தான் ஆகிறது, அதற்குள் கல்யாணம் என்றால் உன் அண்ணியும் சரி சொல்ல வாய்ப்பேயில்லை...
உனக்கு தான் அடுத்து இரண்டு பெண்கள் இருக்காங்க இல்ல, அதில் யாரையாவது என் மகனுக்கு எடுக்கலாம். நீ இப்ப கவலைப்படாமல் உன் மகளை கேட்ட இடத்தில் கல்யாணம் செய்து வை என்றார்...
ஒரு புறம் அகல்யாவிற்கு சந்தோசம், அசோக் தன் அக்காவை வேண்டாம் என சொன்னது, மறுபுறம் தன்னையும் வேண்டாம் என சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் இருந்தது...
வருடங்கள் காற்றை போல ஓடியது..ஒரு நாள் திடீரென அகல்யாவின் அம்மா அழுது கொண்டுயிருந்தாள். என்னம்மா, என்ன ஆச்சு, ஏன் அழுறீங்க என அகல்யாவும் அவளு தங்கையும் கேட்க,"அசோக் சென்னையில் ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய முடிவு செய்துட்டானாம்...வருகிற வெள்ளி கிழமை நிச்சயம், நீங்க கண்டிப்பா போங்க மாமி என சொன்னதாக அம்மா சொன்ன வார்த்தைகள் அகல்யாவால் வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அழுதேவிட்டாள்...
இதோ இன்றோடு அசோக் கல்யாணம் முடிந்து 2 ஆண்டுகள் போனதே தெரியவில்லை, ஆண் பிள்ளை ஒன்றும் பிறந்துள்ளதாக அம்மா சொன்னது ஞாபகம் வந்தது....
தன் கல்யாணத்திற்கு அசோக் வர போவதில்லை, தான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற திடமான நம்பிக்யோடு கைகளில் இருந்த மருதாணியை பார்த்து கொண்டே தூங்கி போனாள் அகல்யா."அவளது அசோக் மெல்ல மெல்ல மனதிற்குள் இருந்து வெளியேறினான்"!

எழுதியவர் : பர்வீன் கனி (28-Feb-15, 6:27 pm)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : akalya
பார்வை : 292

மேலே