பொண்ணன்
பொண்ணன்
*பெண் பார்க்க வருகிறான்
பொம்மையா தான் இருக்கிறான்
பெற்றோரை நம்புறான்
பரிதவித்து போகிறான்
*காலம் எப்போ கனியும்
கல்யாணம் எப்போ கைகூடும்
ஜோசியம் தான் பாக்குறான்
சோக்கா தான் திரியுறான்
*காலமெல்லாம் போனபின்னே
தன்னால தெளியுறான்
தானே தேடுறான் தேடுறான்
தடுக்கியும் தான் விழுவுறான்
*ஆசையெல்லாம் வைக்கிறான்
அமைதியாவே இருக்கிறான்
அன்னம்ம்மா காலடியே
சொர்க்கம்னு புலம்பறான் புலம்பறான்
* வருஷமெல்லாம் போனபின்னே
வயசும் தான் ஆன பின்னே
ஒரு நாள் ரோசம் வந்து கேட்குறான்
எல்லா வீட்டு வேலையும் நானே செஞ்சா
பொஞ்சாதி நீ எதுக்கு
* கத்தறான் கதறுரான் புலம்பறான்
பெற்றோரை நம்பாதே கண்முடி தனமா
பொஞ்சாதிய நம்பாதே கண்ண தொறந்து கிட்டே
வாழ்க்கையோட வாழ பாரு
உலகத்தோட ஓட பாரு -இந்த
பொண்ணனோட தலையெழுத்து மாறுமா-இப்பவும்
ஜோசியம் தான் பாக்குறான்
சோக்கா தான் திரியுறான் .....
சிவ.ஜெயஸ்ரீ