நம்பிக்கை தீர்மானம்

முள்ளாய் குத்தும்
தீயாய் சுடும்
கிழித்து போடும்
நிகழ்வுகள்..

முள்ளையும்
தீயையும்
நிகழ்வுகளையும்
நம்பியிருக்கும் வரை..!

இப்படித்தான்
இவை
இருக்க வேண்டும்
என்று ஒரு வட்டத்திற்குள்
வளைய வரும் வரை..!

உலகம் பெரியது..
விரிந்திருக்கும்
விண்ணோ
அதனிலும் பெரியது..
நம்பிக்கையோ
அனைத்திலும்
பெரியது !

எதன் மீது
நம்பிக்கை
என்பதே
அனைத்தையும்
தீர்மானிக்கின்றது!

பொய்களின்
நிழலில்
மெய்
சுகித்திருப்பதில்லை..!

பொய்யின்
நிழலே பொய்யானது..
என்பதே
மெய்!.

எழுதியவர் : கருணா (2-Mar-15, 12:28 pm)
பார்வை : 126

மேலே