எழுத்துப் பயணத்தின் இடையில்

சிக்கிய வார்த்தைகள்
யாவும்..
சிக்கி முக்கி கற்கள்
போலும்!!
உரசியதில் எழுந்தது
எழுத்து.
புகையென..முதலில்..

படித்து பிடித்ததால்
வந்தது பல
பின்னூட்டம்..அதனால்
பேரிகை மீதேறி
ஆட்டம்!
பின் ..
கவிதைத்தீ (!) மூட்டம்!

கடுப்பாக்கும்
எழுத்து கண்டு
கடுமையேதும்
காட்டிடாமல்
விலகி செல்லும்
பண்பாளர் கூட்டம்
எனக்குமுண்டு!

எனக்கிட்ட புள்ளிகளே
கவிதைக் கோலம்
நான் வரைவதற்கு
துணை வந்தன..
இலக்கணமும் நயமுமில்லா
என் குறை மறந்து
இஷ்டப்படி நான் வரைந்து
ரங்கோலி (!!!) போலான
என் எழுத்துக்கு !

ஒருவேளை
என்றேனும் ஓர் நாள்
நானும் ..
பெரும் தமிழ்க் கவிஞர்
எனும் நிலை அடைவேன்..
என்று
விதியிருந்தால்..
(தமிழருக்கு)
என்னை வளர்த்தது யாரெல்லாம்
என்ற இரகசியத்தை
உடைக்க மாட்டேன்..
தானாக தமிழ் பாடும்
சுயம்பு வாக
உருவெடுத்தேன்..
என்று மட்டும்
அடக்கத்துடன்
சொல்லிக் கொள்வேன்..!

அதுவரையில்
அழைத்துச் செல்வீர்
கை பிடித்து என்னை..
மழலை சொல் கேட்பீர்!

தம்பி.. சோடா கொடு!

எழுதியவர் : கருணா (2-Mar-15, 2:52 pm)
பார்வை : 109

மேலே