கிறுக்கிய வரிகள் பாக்களா

கிறுக்கிய உன்வரிகள் கவிதையா வதில்லை -----------1
கிறுக்கிய கோடுகள் ஓவியம் ஆவதில்லை
வண்ணங்கள் வளைந்தால் வானவில்
வண்ணமாய் எண்ணம் விரிந்தால் கவிதை


கிறுக்கிய உன்வரிகள் நற்கவிதை இல்லை --------------2
கிறுக்கிய கோடுகள் ஓவியம் இல்லை
வண்ணங்கள் வானில் வளைந்தால் வானவில்
வண்ணமாய் எண்ணம் விரியகவி தை


கிறுக்கிய உன்வரிகள் நற்கவிதை இல்லை ---------------3
கிறுக்கிய கோடுகள் ஓவியம் இல்லையே
வண்ணங்கள் வானில் வளைந்திடின் வானவில்
வண்ணமாய் எண்ணமே பா .

-----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : ரசிப்போர் பாக்களை அடையாளம் காணவும்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-15, 7:52 pm)
பார்வை : 147

மேலே