என்னை கட்டியணைக்கும் கண்மலரே 555
என்னுயிரே...
நீ இல்லாமல் என்னை கடந்து
செல்லும் ஒவ்வொரு வினாடியும்...
வினாடியோடும் இதயத்தோடும்
போராட்டம்தான்...
என்னருகில் நீ
வந்துவிட்டால்...
மனதுள் பூவுக்குள்
ஓர் யுத்தம்தான்...
என்னை கட்டிக்கொள்ளும்
கண் மலரே...
உன்னிடல் எல்லாம் பிடிகிறது
ஒன்றை தவிர மட்டும்...
உன்னைவிட உரிமை
யாருக்கு உண்டு...
உரிமைகள் இருந்தும்
எடுத்துகொள்ள மறுக்கிறாய்...
மீண்டும் ஓர் பிறவி
இருந்தால்...
நீயே என் அன்னையாக
வேண்டும்...
என் உயிரானவளே...
வேண்டுமடி இந்த
வரம் மட்டும்.....