வெள்ளை குதிரை
வெட்டருவா மீசை கொண்டு
வேல் கம்பு கையில் கொண்டு
வெள்ளை குதிரை ஏறி
மாயாண்டி வரும் வேளை
நல்ல உள்ளம் கலகலக்கும்
கள்ள உள்ளம் படபடக்கும்
நல்வாக்கு கேட்டு ஏங்கி நிற்கும் எங்களுக்கு
உன் சொல்வாக்கு வரம் தந்து
வாழ்வளிக்க வேணுமையா!
சேட்டை செய்யும் கயவர்களை
உன் சாட்டை அடி வீழ்த்துமையா!
நீதி சொல்லி சனம் வாழ
பாதை காட்ட வேணுமையா!