SUNDARI SANKARAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SUNDARI SANKARAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 10 |
நிலையில்லா உலகத்தையும்
நிரந்திரமில்லா வாழ்க்கையையும்
நிஜமில்லா மனிதர்களையும்
கலைந்திடும் கனவுகளையும்
நேசிக்க கற்றுக்கொள்கின்றேன்
வெறுக்கும் உறவுகளையும்
விட்டுச்செல்லும் நண்பர்களையும்
குத்திக் கிழிக்கும் முட்களையும்
சுட்டெரிக்கும் நெருப்பையும்
நேசிக்கக் கற்றுக்கொள்கின்றேன் .
காலை உரசும் பெருசுகளையும்
இடையை கிள்ளும் இளசுகளையும்
உடலை விற்கும் விபசாரிகளையும்
அவர்களுடன் இருக்கும் ஆண்களையும்
நேசிக்க கற்றுக்கொள்கின்றே ன் .
கரு கலைப்பையும்
கற்பழிப்பையும்
கதறி அழும் மாந்தரையும்
கண்மூடி எனும்
ரசிக்க கற்றுக் கொள்கின்றே ன் .
ஏன் எனில்
நேசிக்கவும் ரசிக்கவும
பட்ஜெட் பற்றி எங்களுக்கு புரியாது ! !
பஞ்சம் மட்டும் பார்த்திருக்கிறோம் !
பங்குச் சந்தை எங்களுக்குப் புரியாது !
பங்காளிச் சண்டை பார்த்திருக்கிறோம் !
வங்கியின் வட்டி விகிதம் தெரியாது !
கந்துவட்டி கந்தசாமியைத் தெரியும் !
கட்டுமான வளர்ச்சி பற்றித் தெரியாது !
கட்டிமுடிக்காத வீட்டுக்கூரை தெரியும் !
முதலீடு லாபம் என்பதெல்லாம் தெரியாது !
முக்காடிட்டு கடன்காரனை தவிர்க்கதெரியும் !
உலக வங்கி எங்குள்ளது என்பது தெரியாது !
பண்டம் பாத்திரம் அடகுவைக்கத் தெரியும் !
வளர்ச்சி விகிதம் ஏறுவது எப்படியோ ?
தளர்ச்சியுற்ற எங்கள் வாழ்வுநிலை அப்படியே !
எப்படியோ ஆகட்டும் திட்டமிடும் அரசினரே
சத்தியமாய்
நான் கவிஞனில்லை
சராசரி மனிதனே!
பத்திய வார்த்தைகள்
எனக்குப் பழக்கமில்லை
பக்குவ மொழியும்
அறியவில்லை!
வலித்தால்
அழத் தெரியும்
பழித்தால்
பழி மீட்கத் தெரியும்
கோபம் தனிவுடமை
மானம் பொதுவுடமை
பக்தி அறிவுடமை!
ஓர் ஆண்
ஓர் பெண்
மூலம் மனித இனம்
எனும் நம்பிக்கை உள்ளவன் நான்!
கருப்போ
சிவப்போ
நிறபேதம் இனபேதம் இல்லை
நீயும் நானும்சகோதரனே!
ஒருவனை உயர்த்தி
ஒருவனை தாழ்த்தினால்
நீ தாழ்த்துபவனை
நான் உயர்த்திப் பிடிப்பேன்!
ஒருவனை தீர்த்தனாகவும்
ஒருவனை தீட்டாகவும் பார்த்தால்
நீ தீட்டென்பவனை
நான் கட்டி அணைப்பேன்!
நீ என்னையும் அவனையும்
சூத்திரன் என்றால்
நான்
வெட்டருவா மீசை கொண்டு
வேல் கம்பு கையில் கொண்டு
வெள்ளை குதிரை ஏறி
மாயாண்டி வரும் வேளை
நல்ல உள்ளம் கலகலக்கும்
கள்ள உள்ளம் படபடக்கும்
நல்வாக்கு கேட்டு ஏங்கி நிற்கும் எங்களுக்கு
உன் சொல்வாக்கு வரம் தந்து
வாழ்வளிக்க வேணுமையா!
சேட்டை செய்யும் கயவர்களை
உன் சாட்டை அடி வீழ்த்துமையா!
நீதி சொல்லி சனம் வாழ
பாதை காட்ட வேணுமையா!
வார்த்தை கணைகளால்
தகர்த்து விட்டாய் என்னை!
வேதனை என்னை வாட்டுகிறது
நீயோ ஒரு கணம் கூட நிற்காமல் செல்கிறாய்
உனக்கென்ன/
உன்னுள் நான் இருந்தால் தானே
உனக்கு தெரியும் என் வலி
மதுவுக்கு அடிமை ஆகி
மதியை அங்கே தொலைத்து
உழைப்பை எல்லாம் இழந்து
பழியை மட்டும் என் மீது சுமத்துகிறாய்
இழந்ததை மீட்கும் சக்தி
எனக்கு இருக்கிறது?
என் மீது அன்பு காட்டும் உள்ளம் இருந்தால்
உங்கள் சம்ப்ரதாயங்கள்
சோடிக்கும் வார்த்தைகள்
தெரியாது எனக்கு?
என் அன்பும்
நீ சொல்லும் குருட்டு பாசமும்
தெரியாது உனக்கு?
ஆனாலும் கழிகிறது நாட்கள்
என்றாவது நீ என்னை புரிந்து கொள்ள மாட்டாயா என்று
பருவம் பார்த்து வருவதில்லை
*****நட்பு *******
மனமும் குணமும் இணைவது தான்
*****நட்பு ******
துரோகங்கள் சோகங்களால்
அழுந்திய உள்ளம்
உறக்கத்தில் தேடியது
நிம்மதி!
உள்ளத்தின் அழுந்தலில்
உறக்கம் தொலைந்தது!
மீண்டும் மீண்டும்
தேடியது நிம்மதியை!
கிடைத்தது உறக்கத்தில்!
ஆம்!
முடிவில்லா உறக்கத்தில்!
சோகங்கள் தொலைந்தன!
திரோகங்கள் தொலையவில்லை!
இன்னும்
எத்தனை எத்தனை
முடிவில்லா உறக்கங்களை
பரிசளிக்க காத்திருக்கிறதோ!
துரோகங்கள் சோகங்களால்
அழுந்திய உள்ளம்
உறக்கத்தில் தேடியது
நிம்மதி!
உள்ளத்தின் அழுந்தலில்
உறக்கம் தொலைந்தது!
மீண்டும் மீண்டும்
தேடியது நிம்மதியை!
கிடைத்தது உறக்கத்தில்!
ஆம்!
முடிவில்லா உறக்கத்தில்!
சோகங்கள் தொலைந்தன!
திரோகங்கள் தொலையவில்லை!
இன்னும்
எத்தனை எத்தனை
முடிவில்லா உறக்கங்களை
பரிசளிக்க காத்திருக்கிறதோ!
வெள்ளி நிலா வானில் உலா வரும்
நள்ளிரவு நேரம்...
தெருவில் நாய்களின் ஊளைச் சத்தம் ...
கூர்கா ஊதும் ஊதலின் அலறல் ....
அவ்வப்போது வாகன இரைச்சல் ....
என -
சப்தங்களின் தோரணம்
ஜன்னல் வழியே அணிவகுத்தது!
செவிகளின் மன்றத்தில்
பெரிதாய் நடந்தது கூத்து!
எதிலும் கலையவில்லை உறக்கம்!
ஆம்!
'நான்' என்பதை மறந்து
இரவின் மடியில்
உறக்கத்தின் பிடியில்
தவழும் சுகம்!
உன்னதம்!
ஆயினும்,
சப்தங்களில் கலையாத
உறக்கமும் கலைந்தது
பூவின் இதழ் பட்டு!
என்ன அதிசயம்!
பூவின் இதழ் என்ன அவ்வளவு கனமா?
ஆம்!
குழந்தை பூவின்
கை இதழின் ஸ்பரிசம்
தாயின் மனதில் அன்பின் கனம்!
உறக்கம் கலைந்தது !
பாசம
கனவென்னும் ஊசியில்
விடாமுயற்சி என்னும் நூலைக் கோர்த்து
தன்னம்பிக்கை எனும் முடிச்சிட்டு
வாழ்க்கை என்னும் துணியை
புதிக்கூர்மையோடு இணைத்து பார்!
வெற்றி எனும் அழகிய ஆடையைப் பெறலாம்!
கனவென்னும் ஊசியில்
விடாமுயற்சி என்னும் நூலைக் கோர்த்து
தன்னம்பிக்கை எனும் முடிச்சிட்டு
வாழ்க்கை என்னும் துணியை
புதிக்கூர்மையோடு இணைத்து பார்!
வெற்றி எனும் அழகிய ஆடையைப் பெறலாம்!