பூவின் இதழ்

வெள்ளி நிலா வானில் உலா வரும்
நள்ளிரவு நேரம்...

தெருவில் நாய்களின் ஊளைச் சத்தம் ...
கூர்கா ஊதும் ஊதலின் அலறல் ....
அவ்வப்போது வாகன இரைச்சல் ....
என -
சப்தங்களின் தோரணம்
ஜன்னல் வழியே அணிவகுத்தது!
செவிகளின் மன்றத்தில்
பெரிதாய் நடந்தது கூத்து!
எதிலும் கலையவில்லை உறக்கம்!
ஆம்!
'நான்' என்பதை மறந்து
இரவின் மடியில்
உறக்கத்தின் பிடியில்
தவழும் சுகம்!
உன்னதம்!

ஆயினும்,
சப்தங்களில் கலையாத
உறக்கமும் கலைந்தது
பூவின் இதழ் பட்டு!

என்ன அதிசயம்!
பூவின் இதழ் என்ன அவ்வளவு கனமா?
ஆம்!
குழந்தை பூவின்
கை இதழின் ஸ்பரிசம்
தாயின் மனதில் அன்பின் கனம்!
உறக்கம் கலைந்தது !
பாசம் விழித்தது!

எழுதியவர் : சுந்தரி யோகி (12-Jul-14, 2:41 pm)
Tanglish : poovin ithazh
பார்வை : 120

மேலே