நேசிக்க கற்றுக்கொள்கின்றேன்

நிலையில்லா உலகத்தையும்
நிரந்திரமில்லா வாழ்க்கையையும்
நிஜமில்லா மனிதர்களையும்
கலைந்திடும் கனவுகளையும்
நேசிக்க கற்றுக்கொள்கின்றேன்

வெறுக்கும் உறவுகளையும்
விட்டுச்செல்லும் நண்பர்களையும்
குத்திக் கிழிக்கும் முட்களையும்
சுட்டெரிக்கும் நெருப்பையும்
நேசிக்கக் கற்றுக்கொள்கின்றேன் .

காலை உரசும் பெருசுகளையும்
இடையை கிள்ளும் இளசுகளையும்
உடலை விற்கும் விபசாரிகளையும்
அவர்களுடன் இருக்கும் ஆண்களையும்
நேசிக்க கற்றுக்கொள்கின்றே ன் .

கரு கலைப்பையும்
கற்பழிப்பையும்
கதறி அழும் மாந்தரையும்
கண்மூடி எனும்
ரசிக்க கற்றுக் கொள்கின்றே ன் .

ஏன் எனில்
நேசிக்கவும் ரசிக்கவும்
அளவில்லாமல் இருந்தாலும்
என்னைச் சுற்றி இருப்பது
இவைகள் மட்டுமே .!!!!!!

எழுதியவர் : கயல்விழி (7-Mar-15, 2:44 pm)
பார்வை : 568

மேலே