என்று தணியும் இந்த மோகம்

இயற்கைவளம் அழிந்துகொண்டிருக்கையில்
அதை பாதுகாக்க மேம்படுத்த
வழிவகை சொல்லித்தராத
கல்வியை வாங்கவும் விற்கவும்
நினைக்கும் மோகம் என்று தணியும் !

சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை
தட்டிக்கேட்காமல் விலகிப்போகும் மனப்போக்கை
மாணவர்களிடம் உருவாக்கும்
கல்வியை வாங்கவும் விற்கவும் நினைக்கும்மோகம்என்றுதணியும்!

எந்நாட்டு மூளையாலும்
என்நாட்டிற்கு பயனில்லை என்றாலும்
"வெளிநாடுவாழ் இந்தியன் சாதனை "
என்ற பெருமை சேர்க்க விரும்பும்
இளைஞர்களை உருவாக்கும்
கல்வியை வாங்கவும் விற்கவும்
நினைக்கும் மோகம் என்று தணியும் !!!

எழுதியவர் : பாரதிகண்ணம்à (7-Mar-15, 4:45 pm)
பார்வை : 63

மேலே