மகளிர் தின நல் வாழ்த்துக்கள் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்

*****உலகில் வாழும் மனிதனை படைத்த******
******கடவுள் பெண்மை தானே! கருவில்******
*****சுமந்து முதலாம் உலகில் போராடி**********
*******ஈன்ற அம்மா பெண்மை தானே!*********
*******தவழ்ந்து திரியும் வயதில் என்னை********
***********கண்ணுக்குள் வைத்தாயம்மா***********
********பள்ளி செல்ல தொடங்கும் போது***********
**********கூட்டிச்சென்ற சகோதரி பெண்மை தானே!*****
********நிலவின் முகத்தை நானும் பார்க்க அன்னமூட்டி******
*******உறங்க வைத்த பாட்டி பெண்மை தானே!****************
********படிப்பில் பெற்ற பரிசைக் கண்டு ரி-மோட்**********
********கார் வாங்கித்தந்த சித்தி பெண்மை தானே!***********
**********மனதில் வந்த சோகத்தை எல்லாம் தோளைத்*********
*******தந்து மறைக்க செய்த தோழி பெண்மை தானே!***********
************இளமைப்பருவம் மனதில் ஏக்கம் நிலவில்***********
****************கனவு தந்த காதலி பெண்மை தானே!************
*****************உயிரில் கலந்து உதிரம் நளைந்து****************
************உடம்பை பகிர்ந்த மனைவி பெண்மை தானே!***********
***************எந்தன் வாழ்வில் அர்த்தம் சொல்ல**************
**************பிறந்த எந்தன் மகள் பெண்மை தானே!*************
***************மனிதனாய் பிறந்து வாழும் வரைக்கும்*************
************அன்பை தந்து கண்ணீர் கசிந்து மனதை**************
************உயிர்பெறச் செய்தவள் பெண்மை தானே!***********
************நெருப்பில் எறியும் மெழுகைப் போல***********
**********பெண்ணின் மனதும் அறிய முடியா உலகின் எட்டாம் அதிசயம்*************
************உலகில் பிறந்த பெண்களுக்கெல்லாம் என் கவியால்***************
***************வாழ்த்துச் சொல்லுகின்றேன்************************
*********பெண்ணே! பெண்ணே! நீதான் கடவுள் அன்பின் கோயில்களில்**********
**********அன்பே! அன்பே! நீதான் நிலவு சிரிக்கும் வீட்டுத் தோட்டங்களில்*********
**********உயிரே! உயிரே! நீதான் எல்லாம் வாழும் உலகினிலே.....**********