பட்ஜெட்
பட்ஜெட் பற்றி எங்களுக்கு புரியாது ! !
பஞ்சம் மட்டும் பார்த்திருக்கிறோம் !
பங்குச் சந்தை எங்களுக்குப் புரியாது !
பங்காளிச் சண்டை பார்த்திருக்கிறோம் !
வங்கியின் வட்டி விகிதம் தெரியாது !
கந்துவட்டி கந்தசாமியைத் தெரியும் !
கட்டுமான வளர்ச்சி பற்றித் தெரியாது !
கட்டிமுடிக்காத வீட்டுக்கூரை தெரியும் !
முதலீடு லாபம் என்பதெல்லாம் தெரியாது !
முக்காடிட்டு கடன்காரனை தவிர்க்கதெரியும் !
உலக வங்கி எங்குள்ளது என்பது தெரியாது !
பண்டம் பாத்திரம் அடகுவைக்கத் தெரியும் !
வளர்ச்சி விகிதம் ஏறுவது எப்படியோ ?
தளர்ச்சியுற்ற எங்கள் வாழ்வுநிலை அப்படியே !
எப்படியோ ஆகட்டும் திட்டமிடும் அரசினரே !
திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற விடுவீரா ?
===========================================================================================
கார்ட்டூன் -நன்றி: - பாமரரின் மனதில் இன்றும் வாழும் அமரர் R K Laxman