ஒருமுறையாவது பாருங்களேன்
நானும்
பார்க்கிறேன்
யாராவது
பார்ப்பீர்கள் என்று.....!!!
மனிதம்
பொழிந்த
கடைத்துளி
நான்தான்....
திக்கற்ற
திசையாயிருக்கிறேன்.....
புழுதியாடை
போர்த்தியிருக்கிறேன்
புத்தாடைகளை
புறந்தள்ளி
வைத்திருக்கிறேன்......
தாய்க்கரம் கூட
தீண்டா
என் தேகத்தை
தீண்டாமை
உரசிக்கொண்டிருக்கிறது......
சீ.....போ.....
சனியனே.....
தரித்திரம்......
தண்டம்....
இவைதான்
நான் கேட்ட
தாலாட்டு.....
புறக்கணிக்கும்
இடதும்
வலதுடன்
சேரும்
கடவுளின்
பார்வையில்......
பரிணாம
வளர்ச்சியின்
பின்
பரிதாப கண்களும்
குருடாகிவிட்டதோ....?
கடினமென்று
தெரிந்தும்
தேடி அழைகிறேன்
நானும்
ஒரு கண்ணப்பரை.....!!!
ஒரு முறையாவது
பாருங்களேன்.....!!!