வலி

வார்த்தை கணைகளால்
தகர்த்து விட்டாய் என்னை!

வேதனை என்னை வாட்டுகிறது
நீயோ ஒரு கணம் கூட நிற்காமல் செல்கிறாய்

உனக்கென்ன/

உன்னுள் நான் இருந்தால் தானே
உனக்கு தெரியும் என் வலி

மதுவுக்கு அடிமை ஆகி
மதியை அங்கே தொலைத்து
உழைப்பை எல்லாம் இழந்து
பழியை மட்டும் என் மீது சுமத்துகிறாய்

இழந்ததை மீட்கும் சக்தி
எனக்கு இருக்கிறது?

என் மீது அன்பு காட்டும் உள்ளம் இருந்தால்

உங்கள் சம்ப்ரதாயங்கள்
சோடிக்கும் வார்த்தைகள்
தெரியாது எனக்கு?

என் அன்பும்
நீ சொல்லும் குருட்டு பாசமும்
தெரியாது உனக்கு?

ஆனாலும் கழிகிறது நாட்கள்

என்றாவது நீ என்னை புரிந்து கொள்ள மாட்டாயா என்று?

குழந்தை ஒன்றை மட்டும் ஆறுதலை கொண்டு!!!

கழிகிறது ஒவ்வொரு நாளும்!

எழுதியவர் : (2-Mar-15, 3:36 pm)
சேர்த்தது : SUNDARI SANKARAN
Tanglish : vali
பார்வை : 90

மேலே