துரோகம்
துரோகங்கள் சோகங்களால்
அழுந்திய உள்ளம்
உறக்கத்தில் தேடியது
நிம்மதி!
உள்ளத்தின் அழுந்தலில்
உறக்கம் தொலைந்தது!
மீண்டும் மீண்டும்
தேடியது நிம்மதியை!
கிடைத்தது உறக்கத்தில்!
ஆம்!
முடிவில்லா உறக்கத்தில்!
சோகங்கள் தொலைந்தன!
திரோகங்கள் தொலையவில்லை!
இன்னும்
எத்தனை எத்தனை
முடிவில்லா உறக்கங்களை
பரிசளிக்க காத்திருக்கிறதோ!