வெண்டுறை 31
வெண்டுறை ..
ஆடிப் பாடி திரும்பி வந்த
ஆசைக் கிளிகள் ஜோடி ஆக
அமர்ந்து கொள்ள இலவ மரத்தில்
காய்த்த பச்சைக் காய்கள் யாவும்
காற்றில் ஆடும் காட்சி கண்டு
கூடு கட்டி அருகில் வாழ்ந்தால்
சுவைக்கக் கனிகிடைக்கு மென்று
வேனல் கால வெப்பம் தாக்கி
காய்ந்து போன இலவம் காய்கள்
வெடித்துச் சிதறி காற்றில் பறக்க
இலவம் காத்த கிளிகள் என்று
உலகம் சொன்னமொழி யுமுண்டு