ஏற்பாயா என்னை

வழித்துணையாக நீ வருவாய் என்று
இதயம் தந்த துணிச்சலில்
கரடு முரடான பாதையையும்
தேர்ந்தெடுக்க துணிந்தேனடா
ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்
உன் அன்பின் அத்தியாவசியத்தை
நினைத்து பார்க்கவும் இயலவில்லை
நீ இல்லாத என்னுலகத்தை
என் வாழ்க்கைச் சக்கரத்தின்
அச்சாணி நீதான் என்கிறேன்
நீயோ தூசியென துடைத்துவிட்டு
என்வழியில் செல்லச் சொல்கிறாய்
இயலாமையால் தான் கெஞ்சுகிறேன்
என் இதயம் வென்றவனே
ஏற்றுக்கொள்வாயா என்னை ....???

எழுதியவர் : கவி (3-Mar-15, 1:40 am)
Tanglish : aerpaayaa ennai
பார்வை : 130

மேலே