தினமலராக
வட்டத்துக்குள்
சிக்கிய வார்த்தை
உனது பெயர் !
குறுக்கெழுத்து
குதர்க்கம்
உன் மனது !
கவிதைச்
சோலையாக
உன் கடிதம் !
அட்டைப்பட
அமர்க்களம்
உன் புகைப்படம் !
வாரமலராக
உன் வரவு !
தினமலராக
தொடரட்டும்
நம் உறவு ...!

