எச்சில் ஆகும் பிச்சைக்காரி
 
            	    
                என் பாதி கிழிந்த ஆடையின் 
இடையே 
படர்ந்து விட்ட உங்கள் கழுகு 
பார்வை தேடுவது எதையோ .?
யாசிக்க நீட்டிடும் என் கரங்கள்
கண்களுக்கு புலப்படவில்லை.
காய்ந்து வறண்ட பேச்சை நீங்கள் 
கண்டுகொள்ளவேயில்லை .
என் விழிகளில் இருந்து வெளியேறும் 
வலி கலந்த விழிநீர் உங்கள் விழிகளுக்கு வேண்டப்படாத ஒன்று .
அரைவயிரெனும்  அன்னம் இடுங்கள்.
பசிக்காய் யாசிக்கும் என்னிடம்
"பத்தே நிமிடத்தில்  படையல் 
போடுகின்றேன் படுக்கைக்கு வா "
என்பது மட்டுமே உங்கள்
பதிலாகி போகின்றது .
பெற்ற பிள்ளையை  போன்றவள் 
பிச்சைக்காரி என்பதால் 
எச்சிலாகி போகின்றேன் 
ராமன் வேஷமிடும் காமுகரின் 
இச்சைக்கு .!!!!!
	    
                
