தேவதைக்கு வாழ்த்து
அந்தி மாலை சூரியனை
மஞ்சள் அரைத்துப் பூசுபவள்..!
ஆவாரம் பூக்காம்பினில்
மாலை கட்டி சூடுபவள்..!
தேவாரம், திருவாசகத்
தமிழ்க் கொஞ்சிப் பேசுபவள்..!
தேவதை..!
இவள் எங்கள் வீட்டிற்குள்
இன்று காலடி வைத்தவள்..!
அண்ணன் மகள் அபிநயாவின்
பிறந்த நாள் இன்று..
வாழ்த்துக்களுடன்.. இந்திரன்.

