திருந்து திருத்து

அண்ணே...ஒரு பாக்கெட் சிகரெட் குடுங்க...


தம்பி...உனக்கெல்லாம் குடுக்க முடியாதுப்பா...


ஏன்?


பத்து வயசு பையனுக்கு ஒரு பாக்கெட் குடுத்தா போலீஸ் புடிக்கும் தம்பி..


எனக்கில்லைண்ணே... என் அண்ணனுக்குதான்...


அண்ணனுக்கா...அவனுக்கும் ஒரு பதினைஞ்சு வயசுக்கு உள்ளேதான இருக்கும்...அவனும் குடிக்க ஆரம்பிச்சுட்டானா...இருங்கடா ரெண்டு பேரையும் உங்க அப்பாகிட்டே போட்டு குடுத்தாத்தான் சரியா வருவீங்க...


யோவ்...அவரே எங்ககிட்ட சிகரெட் கடன் கேட்டிருக்காரு....அவருகிட்ட போட்டுகுடுக்க போறியாக்கும்... சிகரெட்ட குடுத்தமா...வியாபாரத்த பார்த்தோமான்னு முன்னேற வழிய பாப்பியா.....அத விட்டுட்டு.... சரி...இவ்வளவு அக்கறை உள்ளவரு ஏன் விக்கிறீங்க?


????????!!!!!!!!!!!!!

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-15, 11:51 am)
பார்வை : 231

சிறந்த நகைச்சுவைகள்

மேலே