நகை சுவை துளிகள் -03
1. “மன்னா, ஆபத்து… ஆபத்து வந்துவிட்டது…!”
“என்ன ஆனது, மாறவர்மன் நம் மீது படையெடுத்து வருகிறானா?”
“இல்லை மன்னா, தாய் வீட்டுக்கு போன மகாராணி அதற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்…!”
2 “என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்…?”
“மன்னா, ‘பட்டத்து யானையை அலங்கரியுங்கள்’ என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்…!”
3. “தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்…”
“இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?”
“சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்க வேண்டியதுதான்!”
4. “மன்னா! அரசாங்க ரகசியத்தை இந்த ஒற்றன் அறிந்து கொண்டான்…”
“நான் சமையலறையில் மகாராணிக்கு உதவியாக காய்கறி அரிந்துகொண்டிருந்ததை இவன் பார்த்துவிட்டானா…?”
5. “மன்னா, எதிரி நாட்டு மன்னனிடமிருந்து போர்ச் செய்தி வந்துள்ளது… என்ன பதில் அனுப்புவது…?”
“நீங்கள் அனுப்பிய ஓலை எமக்கு கிடைக்கவில்லை, என்று பதில் ஓலை அனுப்பிவிடலாமா…?”
நன்றி முகநூல்

