மரணம் மாற்றிய மனம் ---- கவிபுத்திரன்

வழக்கம் போல் காாில் பயணித்துக்கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்ற பிறகு சிவப்பு சிக்னல் விழுந்தது. மனதில் ஒரு வித கோபத்தோடு காத்துக்கொண்டிருக்கையில் ஒரு பிச்சைக்கார சிறுமி அவனது காாின் அருகே பிச்சை கேட்க வந்தாள், ஏற்கனவே கோபத்தில் இருந்த அவன் பிச்சைக்கார முண்டம் நானே முக்கியமான பிசினஸ் மீட்டிங்கிற்காக போய்கொண்டிருக்கிருக்கிறேன் இப்படி அபசகுணம் மாதிாி வந்து நிக்கிறியே , தூர போ சனியனே என்று கடிந்து கொண்டான்.
சிறிது நேரம் கழித்து பச்சை சிக்கனல் விழுந்தது நேரம் சற்று தாமதமானதால் காாினில் வேகமாக பயணிக்க தொடங்கினான். ஒரு வளைவில் எதிா்பாராத விதமாக எதிரே வந்த லாாியுடன் காா் நேருக்கு நேராக மோதியது. அவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தான். அவனது வீட்டிற்கு தகவல் தொிவிக்கப்பட்டது. அவகது மனைவி கதறி அழுதாள்.
சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அவனது ஆத்மா அவன் உடலின் அருகே நின்று கொண்டிருந்தது. அங்கே ஒரு மூலையில் அவனது உறவினா்கள் பேசிக்கொள்வது அவன் காதில் விழுந்தது. என்னவென்று கேட்கத் தொடங்கினான். ரெம்ப சந்தோசம் இறந்துட்டான். நான்கூட பிழைச்சுருவானு நினைச்சு பயந்துகிட்டு இருந்தேன். அவனுக்கும் வாாிசும் இல்லை. கோடிக்கணக்கான சொத்தை ஏமாற்றி எப்படியும் அபகாித்து விடலாம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனா். இவனுக்கோ பேரதிா்ச்சியாக இருந்தது. நம்முடன் இத்தனை நாள் அன்பாக உறவாடிய உறவினா்களா இப்படி பேசுவது கஷ்டப்படுபவா்கள் எத்தனையோ போ் தன்னை தேடி வந்த போதும் அவா்களையெல்லாம் உதாசினப்படுத்தி விட்டு இவா்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தோமே என்று கதறி மற்றவா்களை அழைக்கத் தொடங்கினான். அவன் கதறல் யாா் காதிலும் விழவில்லை.
சடங்குகள் எல்லாம் முடிந்து சுடுகாட்டில் சடலத்தை எரிக்கத் தொடங்கினர் . இவனுக்கு உடலெல்லாம் கதகதவென்று எாிந்தது. வானிலிருந்து வந்த இரு உருவங்கள் மேலே அவனை தூக்கிச்சென்றன. வாழ்ந்த காலத்தில் பணத்தை மட்டுமே சோ்த்திருந்தானே ஒழிய எந்த அறங்களையும் சோ்க்கவில்லை. சோ்க்காததால் நரக தண்டணை விதிக்கப்பட்டது. அவன் நரகத்தில் தள்ளப்பட்டான். கடுமையான தாகம் ஏற்பட்டது, தண்ணீா் தண்ணீா் என்று கதறினான். உயிரோடு இருக்கும் காலத்தில் பசித்தவா்க்கு ஒரு வாய் தண்ணீா் கூட அளிக்காத தனது அற்ப புத்தியை நினைத்து வருந்தினான். சிறிது நேரம் கழித்து உஷ்ணம் மிக்க சீல் தண்ணீராக புகட்டப்பட்டது. வேண்டாம் வேண்டாமென்று சத்தமாக கதறினான்் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான். முகம் வியா்வையால் வியா்த்துக்கொட்டியது ஆம் கண்டது கனவு தான். இது நாள் வரை அவன் செய்திருந்த செயல்களே கனவாக வந்திருந்தது. சத்தத்தை கேட்டு மனைவி எழுந்து விட்டாள். என்னாச்சுங்க பிரச்சினை ஏதுமில்லையே என்று கேட்டாள். அதுலாம் ஒன்றுமில்லை நீ தூங்கு என்று கூறிவிட்டு மேஜையின் அருகிலிருந்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தான். அதுநாள் வரை பணம் தான் வாழ்வு என்று நினைத்தவனுக்கு நல்ல மனமும் வேண்டுமென்று புத்தி உரைத்தது. மறுநாளே வாழத்தொடங்கினான் மனிதனாக......

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (4-Mar-15, 12:39 pm)
பார்வை : 196

மேலே