உன்னைச் சுற்றி பாரடா

எண்ணத்தில் தூய்மை கொண்டு
இருப்பாயடா -மனிதா
என்றைக்கும் வாய்மையதை
காப்பாயடா!

முன்னவர் செய்த நல்ல
புண்ணிய மூட்டை பெற்ற
புண்ணியவான் நீயடா - மனிதா
பாவங்கள் தொலைப்பாயடா-நிலைத்த
புகழுடன் வாழ்வாயடா!

உத்தமர் போல் நடித்தே
ஊரை அடித்து வாழும்
உன்மத்தர் உள்ளாரடா-மனிதா
நஞ்சினை வைப்பாரடா-நாளும்
நயமின்றி வாழ்வாரடா!

ஆசைக்கு எல்லை இல்லை
அன்புக்கு தோல்வி இல்லை
வேண்டியதைத் தேர்வாயடா -மனிதா
புவியினை ஆள்வாயடா- பண்பாய்
வாழ்தலில் பெருமை கொள்ளடா!

எழுதியவர் : கருணா (4-Mar-15, 3:30 pm)
பார்வை : 60

மேலே